பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் …

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸூறாக்களுக்கிடையிலான வித்தியாசத்தை அறியாதவராக இருந்தார்

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸூறாக்களுக்கிடையிலான வித்தியாசத்தை அறியாதவராக இருந்தார்.

[ஸஹீஹானது-சரியானது] [இந்த ஹதீஸை அபூ தாவூத் பதிவு செய்துள்ளார்]

الشرح

அல்குர்ஆனின் ஸூறாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இறங்கிக் கொண்டிருந்தன. நபியவர்கள் ஒவ்வொரு ஸுறாவும் எந்த இடத்தில பிரிகிறது என்பதையோ எந்த இடத்தில் முடிவடைகிறது என்பதையோ பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்ற வசனம் இறங்கும் வரையில் அறியாதவராக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா தெளிவு படுத்துகிறார்கள்.பிஸ்மில் இறங்கியதும் குறிப்பிட்ட ஸுறா முடிவடைந்து புதிய ஒரு ஸுறாவின் ஆரம்பம் குறித்து அறிந்து கொண்டார்கள்.

فوائد الحديث

ஸுறதுல் அன்பால், ஸூறதுத்தௌவ்பாக்கிடையில் தவிர ஒவ்வொரு ஸுறாவையம் பிரிக்கும் வசனமாக பிஸ்மில் உள்ளது.

التصنيفات

அல்குர்ஆன் அருளப்படுதலும் ஒன்று திரட்டலும், அல்குர்ஆன் ஒன்று திரட்டல்