மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று…

மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்

அபூ ஹாஸிம் இப்னு தீனார் அவர்கள் அறிவித்தார்கள் : சில மனிதர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மிம்பர்-பிரசங்க மேடை எதனால் அமைக்கப்பட்டது என்ற வாதத்தில் ஈடுபட்ட நிலையில் ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதி ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வந்து அது பற்றி வினவினர். அதற்கு ஸஹ்ல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த மின்பர் மேடை எதனால் அமைக்கப்பட்டது என்பது குறித்து நான் அறிவேன். அதே போன்று அது வைக்கப்பட்ட முதல் நாளிலேயே நான் அதனைப் பார்த்ததுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதில் அமர்வதை நான் கண்டேன். 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெண்ணிடம் - அன்ஸாரிப் பெண்களில் ஒருவரான ஸஹ்ல் என்ற பெயரால் அழைக்கப்படுகின்ற பெண்ணிடம்- 'தச்சு வேலை செய்யும் உன்னுடைய அடிமையிடம் நான் மக்களுக்கு உரையாற்றும்போது அமர்ந்து கொள்வதற்கேற்ற மேடையைச் செய்து தரச் சொல்' என்று சொல்லி அனுப்பினார்கள். அப்பெண் தம் அடிமையிடம் இதைக் கூறினார். அந்த அடிமை ஃகாபா எனும் பகுதியில் உள்ள மரத்தில் அதைச் செய்து வந்தார். அப்பெண் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கொடுத்தனுப்பினார். அதை தற்போது இருக்கும் இந்த இடத்தில் வைக்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள், பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி அதன் மீது தொழுததையும், அதன் மேல் இருந்தபோது தக்பீர் - ஆரம்ப தக்பீர் - கூறுவதையும் நான் பார்த்தேன்; பின்னர் அவர் அதன் மேல் இருந்தவாறு குனிந்து ருகூஉ செய்தார்கள், பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பரின் அடிப்பகுதியில் ஸஜ்தா செய்ததன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்பிச் சென்றார்கள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி: மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

சில மனிதர்கள் நபித்தோழர் ஒருவரிடம் வந்து, நபியவர்கள் பயன்படுத்திய பிரசங்க மேடை –மின்பர்- எதனால் செய்யப்பட்டது? என்று விசாரித்து தகராறிலும் வாதத்திலும் ஈடுபட்டார்கள். அதற்கு அந்த ஸஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தச்சு வேலை தெரிந்த அடிமையைப் பெற்றிருந்த ஒரு அன்ஸாரிப் பெண்ணிடம் : 'நான் மக்களுக்கு உரையாற்றும் போது அமர்வதற்காக உங்கள் தச்சு வேலை தெரிந்த அடிமையிடம் ஒரு மின்பரை அமைத்து தருமாறு கூறுங்கள்' என்று வேண்டிக் கொள்ள அதனை அப்பெண்மணி ஏற்றுக் கொண்டு, தனது அடிமையிடம் தர்பாஉ எனும் மரத்தினால் மின்பரை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு செய்து தருமாறு பணித்தாள். அதனை செய்து முடித்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அப்பெண் அனுப்பி வைத்தாள். அதனை நபியவர்கள் பள்ளியில் உரிய இடத்தில் வைக்குமாறு பணித்தார்கள் பிறகு, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அதன் மீது ஏறி தக்பீர் கூறி தொழுதார்கள், பின்னர் அவ்கள்; அதன் மேல் இருந்து ருகூஉ செய்தார்கள். பின்னர் அவர்கள் பின்னோக்கி கீழே வந்து, மின்பர் மேடையின் அடியில் ஸுஜூத் செய்தது விட்டு அவர்கள் திரும்பிச் சென்றாரகள். இவ்வாறு அவர்கள் தொழுகையை முடித்ததன் பின் மக்களை முன்னோக்கி, மக்களே! நான் இந்த மிம்பரை செய்தது உங்களுக்கு இமாமத் செய்யவும், எனது தொழுகை முறையை கற்றுத்தரவுமே என்று கூறினார்கள்.

فوائد الحديث

போதகர் -கதீப்- தனது செய்தியை சிறப்பாக தெரிவிக்கவும் மக்களால் நன்றாக செவியுறவும் உதவும் வகையில் மின்பர் மேடை ஒன்றைப் பயன் படுத்துவது வரவேற்கத்தக்க விடயமாகும்.

கற்பிக்கும் நோக்கில் மின்பரின் மீதேறி தொழுவதற்கு அனுமதியுண்டு. அதே போல் மஃமூமை விட இமாம் தேவையின் நிமித்தம் உயரமான இடத்தில் இருப்பதற்கும் அனுமதியுண்டு.

முஸ்லிம்களின் தேவைகளுக்காக தொழில் வாண்மையாளர்களின் உதவியை பெற்றுக் கொள்ள அனுமதியுண்டு.

தேவையின் நிமித்தம் தொழுகையின் போது சிறிய அசைவுகள் அனுமதிக்கப்படுகிறது.

இமாமின் பின்னால் தொழுது கொண்டிருக்கும் ஒருவர் கற்றல் நோக்கத்திற்காக இமாமைப் பார்ப்பது அனுமதிக்கப்படுகிறது. அது தொழுகையில் உள்ளச்சத்துடன் இருத்தலுக்கு முரணாக அமையமாட்டாது.

التصنيفات

தொழும் முறை