'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'

'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு முஸ்லிம் தனக்கு சம்பந்தமில்லாதவைகளை விட்டு விடுவது இஸ்லாத்தின் சிறந்த காரியங்களில் ஒன்றாகும்'.

[قال النووي: حديث حسن] [رواه الترمذي وغيره]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந் ஹதீஸில் ஒரு முஸ்லிமின் இஸ்லாத்தின் அழகுகளின் முழுமை மற்றும் அவரது நம்பிக்கையின் நிறைவு தனக்கு சம்பந்தமில்லாததை விட்டுவிடுவதும் தனக்கு எவ்விதத்திலும் பயனில்லாத வார்த்தைகள் மற்றும் செயல்களை விட்டுவிடுவதாகும் என விளக்கியுள்ளார்கள். அல்லது மார்க்க மற்றும் உலகியல் சார் விடயங்களில் பயனற்ற தேவையில்லாத விடயங்களை விட்டுவிடுவதை இது குறிக்கும். அத்துடன் தேவையற்றவற்றில் ஈடுபடுவது தேவையானதை செய்வதை தடுத்து விடும். மறுமை நாளில் இது குறித்து அனைவரும் விசாரிக்கப்படுவர். எது எப்படி இருந்தாலும் மனிதர்கள் யாவரும் அவரவர் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவர்.

فوائد الحديث

இஸ்லாத்தில் மனிதர்கள் தங்களுக்கு மத்தியில் செயல்களால் வித்தியாசப்படுவர். அந்த வகையில் சில செயல்கள் அவர்களின் நன்மைகளை அதிகரிக்கச்செய்கின்றன.

வீண் பேச்சு மற்றும் வீண் செயல்களிலிருந்து விலகி இருப்பது ஒரு மனிதனின் பூரண இஸ்லாத்திற்கு சான்றாகும்.

ஒருவரை மார்க்க மற்றும் உலக விவகாரங்களில் ஈடுபட ஊக்குவிப்பது. ஒருவரின் அழகிய இஸ்லாம்; என்பது தேவையற்றதை கைவிடுவதாக இருப்பின், தனக்கு தேவையானவற்றில் ஈடுபடுவது அவரது அழகிய இஸ்லாத்தின் வெளிப்பாடாகும்.

இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகையில் :நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேணுதலை ஒரே வார்த்தையில் ஒன்று சேர்த்து குறிப்பிடுகிறார்கள். அந்த வார்த்தைதான் : ஒரு முஸ்லிமின் சிறந்த இஸ்லாமியப் பண்புக்கு ஆதாரம் அவருக்குத் தேவையற்ற அல்லது பயனற்றவற்றை விட்டு விடுவதாகும். இங்கே விட்டுவிடுவது என்பது தேவையற்ற பேச்சு தேவையற்ற பார்வை, தேவையற்ற விடயங்களுக்கு காது கொடுத்தல், தண்டித்தல், தேவையற்ற விடயங்களுக்கு நடந்து செல்லுதல், தேவையற்ற சிந்தனை ஏனைய வெளிப்படையான மற்றும் மறைமுகமான அசைவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்குவதாகும். இது பேணுதல் குறித்த முழுமையான ஒரு வார்த்தையாகும்.

இப்னு ரஜப் ரஹ் அவர்கள் குறிப்பிடுகையில் : நல்லொழுக்கத்தின் அடிப்படைகளில் ஒன்றைப் பற்றி பேசும் மிக முக்கியமான ஹதீஸாக இது உள்ளது என்கிறார்.

கல்வி கற்குமாறு தூண்டப்பட்டிருத்தல். காரணம் ஒரு மனிதன் கல்வி கற்பதன் ஊடாகவே தேவையானது எவை? தேவையற்றவை எவை என்பதை புரிந்து கொள்கிறான்.

நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல் மற்றும் மனிதனுக்கு தேவையானவற்றை குறித்து அறிவுரை கூறுதல். இவையெல்லாம் மனிதனுக்கு வலியுறுத்தப்பட்ட விடயங்களாகும்.

இந்த ஹதீஸின் பொதுவான கருத்து பின்வரும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது, அவை எல்லாம் வல்ல அல்லாஹ் தடை செய்தவை மற்றும் நபி (ஸல்) அவர்கள் விரும்பாதவைகளும் அடங்கும். அதே போன்று மறைவான விடயங்கள் பற்றிய யதார்த்தத்தை அறிந்து கொள்ள முற்படுதல், மற்றும் படைப்பு மற்றும் இறை கட்டளையின் மீதான தீர்ப்பின் விவரங்கள் போன்ற மறுமை சார் விடயங்களில் தேவையில்லாதவற்றைத் தவிர்ப்பதும், இதில் நடக்காத, அல்லது நடக்க வாய்ப்பில்லாத, அல்லது நடக்கக் கூடாத முன்னரே தீர்மானிக்கப்பட்ட மற்றும் கற்பனையான விஷயங்களைப் பற்றி கேட்பது மற்றும் தேடுவதும் அடங்கும்.

التصنيفات

தீய குணங்கள்