'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்

'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்

ஸஃத் இப்னு ஹிஷாம் இப்னு ஆமிர் அவர்கள் ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பின்வருமாறு கேட்டார்கள் : விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடுகள் பற்றி எனக்கு அறிவித்துத்தாருங்கள் என்று கேட்டதற்கு ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா 'நீர் அல்குர்ஆனை ஓதுவதில்லையா?' என வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்று கூறினேன். அதற்கு அவர்கள்; 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பண்பாடு அல் குர்ஆனாகவே இருந்தது' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அவர்களின் பண்பாடு குறித்து வினவப்பட்டபோது அவர்கள் மிகவும் சுருக்கமானதும் பொருட்செரிவுமிக்கதுமான ஒரு பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவரை எல்லா முழுமையான பண்புகளையும் நிறைவாகக் கொண்ட அல்குர்ஆனின் பக்கம் அவரின் அவதானத்தைத் திருப்பியதோடு, நபியவர்கள் அல்குர்ஆன் குறிப்பிடும் பண்பாடுகளை கடைப்பிடித்து ஒழுகினார்கள் எனப் பதிலளித்தார்கள். அதாவது அல்குர்ஆன் ஏவியவற்றை நிறைவேற்றினார்கள். அல்குர்ஆன் தடுத்தவற்றை தவிர்ந்திருந்தார்கள். அவர்களின் பண்பாடு அல்குர்ஆன் குறிப்பிடுபவற்றை நடைமுறைப்படுத்துவதும், அதன் வரையறைகளைப் பேணி நடப்பதும், அது கூறும் நற்பண்புகளை கடைப்பிடித்து ஒழுகுவதும், அது (அல்குர்ஆன்) கூறும் கதைகள் மற்றும் உதாரணங்களினால் படிப்பினை பெறுவதும் அவர்களின் பண்பாடாக இருந்தது.

فوائد الحديث

அல் குர்ஆனிய பண்பாடுகளை பண்பாகக் கொள்வதில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறையை முன்மாதிரியாக் கொண்டு நடப்பதை ஊக்குவித்தல்.

நபியவர்களின் பண்பாடுகள் வஹியின் ஒளியால் பெறப்பட்டவை என்பதினால் அவர்களின் பண்பாடுகள் புகழப்பட்டிருத்தல்.

அல்குர்ஆன் நற்பண்புகள் அனைத்திற்குமான மூலாதாரமாகும்.

இறைக்கட்டளைகளை எடுத்து நடந்து, விலக்கல்களை தவிர்ந்து நடப்பதின் காரணமாக இஸ்லாத்தில் பண்பாடுகள் என்பது மார்க்கத்தின் எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

التصنيفات

பண்பாடு