அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு,…

அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்

ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்கள். 'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, 'நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையை விடலாமா?' என்று கேட்டதற்கு, ' வேண்டாம், அது ஒரு நரம்பு நோய், மாதவிடாய் இரத்தமன்று. மாதவிடாய் ஏற்படும் நாட்களின் அளவுக்குத் தொழுகையை விட்டுவிட்டு, பின்னர் குளித்து தொழுது கொள்' என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

பாதிமா பின் அபூ ஹுபைஷ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து: 'தனக்கு தொடராக இரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை, அது மாதவிடாய் காலப்பகுதியையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது, எனவே மாதவிடாய் சட்டத்தைப் பின்பற்றி தொழுகையை விட்டுவிடலாமா?' எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்: 'அது தொடர் உதிரப்போக்கு, கருப்பையில் உள்ள நரம்பின் துண்டிப்பினால் ஏற்படுகின்ற நோய் நிலை இரத்தமாகும். அது மாதவிடாயல்ல எனப் பதிலளித்தார்கள் ஆகவே இஸ்திஹாழா வரமுன் உமக்கு வழமையில் மாதாந்தம் ஏற்படுகின்ற மாதவிடாய் காலப்பகுதியை நீ அடையும் நேரத்தில் அக்காலப்பகுதியில் மாத்திரம் தொழுகை மற்றும் நோன்பு போன்றவற்றை விட்டுவிடுவீராக, இது மாதவிடாய் காலப்பகுதியில் பின்பற்ற வேண்டிய விடயங்களாகும். வழமையான மாதவிடாய் நாட்கள் -காலப்பகுதி- முடிவடைந்ததுவிட்டால், நீ மாதவிடாயிலிருந்து தூய்மை அடைந்துவிட்டாய், ஆதலால் இரத்தம் இருக்குமிடத்தை நன்கு கழுவிவிட்டு பின்னர் தொடக்கை நீக்குவதற்காக முழுமையாக உடலை கழுவி குளித்து கொண்டு பின் தொழுவீராக என்று குறிப்பிட்டார்கள்.

فوائد الحديث

ஒரு பெண் தனது மாதவிடாய் நாட்கள் முடிவடையும் போது குளிப்பது கடமையாகும்-வாஜிபாகும்.

தொடர் உதிரப்போக்கால் பாதிக்கப்பட்ட பெண் தொழுவது கடமையாகும்.

ஹைழ் என்பது; வயதுவந்த ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதிகளுள் ஒன்றான கருப்பையிலிருந்து யோனியினூடாக வெளிப்படும் இயற்கையான குருதியாகும். இது மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்கள் அவளுக்கு ஏற்படுகிறது.

'இஸ்திஹாழா' என்பது கருப்பையின் அடிப்பகுதியில் அல்லாது அதன் வாய்ப்பகுதியில், மாதவிடாய் காலப்பகுதியல்லாத நேரங்களில் அல்லது மாதவிடாய் காலப்பகுதியுடன் இணைந்து ஏற்படும் உதிரப்போக்காகும்.

ஹைழ் (மாதவிடாய்) மற்றும் இஸ்திஹாழா(தொடர்உதிரப்போக்கு) இடையிலான வேறுபாட்டைப் பொறுத்தவரை ஹைழ் இரத்தமானது கருமையும், அடர்த்தியும் நிறைந்தாக இருப்பதோடு துர் நாற்றமும் காணப்படும். இஸ்திஹாழா இரத்தமானது அடர்த்தியற்ற சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு அதற்கென்று துர்நாற்றங்கள் காணப்படமாட்டாது.

التصنيفات

மாதவிடாய், பிரசவ இரத்தப் போக்கு, மாதவிடாய் அல்லாத இரத்தப் போக்கு