'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின்…

'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: 'ஒரு முஃ மினான ஆண் (கணவன்) ஒரு முஃமினான பெண்ணை (மனைவியை)வெறுக்க (வேண்டாம்.) அவளது ஒரு குணத்தை வெறுத்தால் அவளின் வேறொரு குணத்தை (விடயத்தை) பொருந்தி அங்கீகரிக்கலாம்.'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

கணவன் தன் மனைவியை அவளுக்கு அநியாயம் இழைத்து கைவிட்டு புறக்ணிக்கும் நிலைக்கு இட்டுச்செல்லும் அளவுக்கு தன் மனைவியை வெறுப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தடுத்தார்கள். நிச்சயமாக மனிதன் குறை உடனே படைக்கப்பட்டுள்ளான். அவளிடமிருந்து வெளிப்படும் கெட்ட, மோசமான குணமொன்றை வெறுத்தால், அவளிலே காணப்படும் வேறொரு நல்ல குணத்தை - பொருந்தி ஏற்றுக் கொள்வான். அத்துடன் அவனால் பொறுந்திக்கொள்ள முடியாத மோசமான பண்புகளில் பொறுமையை கடைப்பிடிப்பான். அவ்விதம் அவன் பொருமையை கடைபிடிப்பிடிக்கும் அந்த மோசமான பண்பை வெறுப்பதானது அவளை பிரிந்து வாழ்வதற்குரிய அளவிற்கு தூண்டுவதாக அமைந்துவிடுதல் ஆகாது.

فوائد الحديث

ஒரு முஃமின் தனது மனைவியுடன் ஏற்படும் எல்லாவிதமான முரண்பாடுகளின் போதும் நீதியுடனும் அறிவுபூர்வமாகவும் செயல்பட வேண்டும் என்றும், உணர்வுகளுக்கும் தற்காலிக உணர்ச்சிகளுக்கு கட்டுண்டு இருக்கக் கூடாது என்றும் தூண்டப்பட்டிருத்தல்.

முஃமின்(தனது) முஃமினான (மனைவியை) விவாக விடுதலையளிக்கும் அளவு முற்றாக வெறுக்காது இருப்பது அவசியம்,

கணவன்மனைவிக்கிடையில் பாச நேசத்தோடும், நல்லமுறையில் உறவாடுவதற்கும் வலியுறுத்தப்பட்டிருத்தல்.

ஈமான் எனும் இறைவிசுவாசம் நற்குணங்களுக்குத் தூண்டுகிறது. எனவே முஃமினான ஆண்,பெண் இரு பாலாரும் நற்குணத்தை விட்டும் நீங்கியிருக்க முடியாது. ஆகவே ஈமான் போற்றப் படக் கூடிய விடயங்கள் அவ்விரு பாலாரிலும் இருப்பதை வலிறுத்துகிறது.

التصنيفات

திருமணம், பெண்களுக்கான சட்டங்கள்