அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்

அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) ஒலித்த அவரது குரல் கேட்டதே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் விளங்க முடியவில்லை. அவர் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களுக்கு) அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் என்றார்கள். அவர் இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதாவது என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?' என்று கேட்க, 'இல்லை', நீயாக விரும்பித் தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், 'இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, 'இல்லை, நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர்,இதைத் தவிர வேறு (தர்மம்) ஏதேனும் என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தை தவிர என்றார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதற்குமேல் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நஜ்த் பிரதேசத்திலிருந்து ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்தார், அவரின் முடி சிதைந்து காணப்பட்டதோடு அவரின் தொணி மிகவும் உயர்ந்து காணப்பட்டது. அதனால் அவர் பேசியது ஒன்றும் புரியவில்லை. அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் மிகவும் நெருக்கமாகச் சென்று இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் குறித்து வினவினார் அதற்கு நபியவர்கள்; முதலில் தொழுகையைப் பற்றிக் கூறினார்கள். ஒரு நாளைக்கு ஜவேளைக் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியதாகக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தவிர்த்து வேறு கடமையான தொழுகைகள் உண்டா? எனக் கேட்டார் அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பிச் செய்யும் நப்லான தொழுகைகள் தவிர என்று பதில் கூறினார்கள். அதன் பின் நபியரவர்கள் உம்மீது அல்லாஹ் ரமழான் மாதத்தில் நோன்பை கடமாக்கியுள்ளான் என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ரமளான் நோன்பு தவிர்த்து வேறு கடமையான நோன்புகள் என்மீது உண்டா எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி நோற்கும் உபரியான நோன்புகளைத் தவிர என்று பதில் கூறினார்கள். பின்னர் ஸகாத் பற்றிக் குறிப்பிட்டார்கள். அதற்கு அம்மனிதர் பர்ழான ஸகாத் தவிர்த்து வேறு கடமையான தர்மங்கள்; என்மீது உண்டா எனக் கேட்டார்? அதற்கு நபியவர்கள் இல்லை, நீயாக விரும்பி செய்யும் தர்மங்கள்; தவிர என்று பதில் கூறினார்கள். இந்த அடிப்படைக் கடமைகள் பற்றி கேட்டதன் பின் அம்மனிதர் இந்தக் கடமைகளை எவ்விதக் கூட்டலும் குறைவவுமின்றி நிறைவேற்றுவதாக சத்தியம் செய்தவராக திரும்பிச்சென்றார்

فوائد الحديث

இஸ்லாமிய ஷரீஆவின் உயர்வும் அடியர்களுக்கு அவை இலகுபடுத்தப்பட்டுள்ளமையும்.

குறித்த மனிதரை அருகில் வருவதற்கு அனுமதித்து கேள்விகளை கேட்பதற்கு அவகாசம் அளித்து நபியவர்கள் அந்த மனிதருடன் அழகிய முறையில் நடந்துகொண்டமை.

இறை அழைப்பியலில் -தஃவாவில்- மிகவும் முன்னுரிமை வழங்க வேண்டிய முக்கிய விடயங்களைக் கொண்டு ஆரம்பித்தல்.

இஸ்லாம் என்பது நம்பிக்கையும் செயலுமாகும். ஆகவே எந்த செயலும் ஈமான் இன்றி எவ்விதப்பயனையும் பெற்றுத்தரமாட்டாது அதே போல் செயலின்றி ஈமான் -வெறும் நம்பிக்கை- மாத்திரம் எவ்விதப்பயனையும் பெற்றுத்தரமாட்டாது.

இந்த செயல்களின் முக்கியத்துவம் மாத்திரமன்றி இவை இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் என்பதை இந்த ஹதீஸ் குறிப்பிடுகிறது.

ஜும்ஆத் தொழுகையும் இந்த ஐவேளைத் தொழுகையில் உள்ளடங்கியுள்ளது, ஏனெனில் ஜும்ஆ தினத்தின் லுஹர் தொழுகைக்கு பதிலாக இது கடமையாக்கப்பட்டுள்ளது.

வந்த நபர் முஸ்லிமாக இருந்ததால் இரு ஷஹாதா கலிமாக்களுக்கு பிறகு உள்ள இஸ்லாத்தின் மிகமுக்கிய கடமைகளை போதிப்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முதன்மைப்படுத்தினார்கள். இதில் நபியவர்கள் ஹஜ் கடமை குறித்து குறிப்பிடவில்லை, காரணம் ஹஜ் கடமையாக்கப்படுவதற்கு முன் இது நிகழ்ந்திருக்கலாம் அல்லது அதற்குரிய நேரம் வராமையினாலாகும்.

ஒரு மனிதன் இஸ்லாமிய ஷரிஆவில் கடமையான காரியங்களோடு மாத்திரம் சுருக்கிக்கொண்டாலும்; அவன் வெற்றி பெற்றவனாவான். இவ்வாறு குறிப்பிடுவதால் அவர் உபரியான வணக்கங்களை செய்வது தேவையில்லை என்பது அர்த்தமல்ல. மாறாக உபரியான வணக்களின் மூலம் கட்டாயக் கடமைகளில் நிகழ்ந்த குறைகள் மறுமை நாளில் நிவர்த்தி செய்ப்படுகின்றன.

التصنيفات

இஸ்லாம்