'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மறைவதற்கு முன்னரும் தொழுத எவரும் நரகம் நுழையமாட்டார்கள். '

'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மறைவதற்கு முன்னரும் தொழுத எவரும் நரகம் நுழையமாட்டார்கள். '

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபூ ஸுஹைர், உமாரா இப்னு ருஐபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 'சூரியன் உதிப்பதற்கு முன்னரும், மறைவதற்கு முன்னரும் தொழுத எவரும் நரகம் நுழையமாட்டார்கள். '

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

இங்கு நபியவர்கள், யாரெல்லாம், பஜ்ர் தொழுகையையும், அஸ்ர் தொழுகையையும் பேணித்தொழுது வருகின்றார்களோ, அவர்கள் நரகம் நுழையமாட்டார்கள் என அறிவிக்கின்றார்கள். இவ்விரு தொழுகையையும் குறித்துச் சொல்வதற்கான காரணம், இவ்விரண்டும் சிரமமான தொழுகைகளாக இருப்பதாகும். அதேபோன்று, ஸுபஹுடைய நேரம் என்பது, தூக்கத்தில் இன்பமாக இருக்கும் நேரமாகும். அஸ்ருடைய நேரம் என்பது, பகல்பொழுது வேலைகளிலும், வியாபாரத்திலும் ஈடுபடும் நேரமாகும். எனவே, சிரமங்கள் இருந்தபோதிலும், யார் இவ்விரு தொழகைகளையும் பேணி வருகின்றாரோ, அவர் நிச்சயமாக, ஏனைய தொழகைகளையும் பேணித் தொழுது வருவார்.

فوائد الحديث

பஜ்ர், அஸர் தொழுகைகளின் சிறப்பு கூறப்பட்டுள்ளது, எனவே அவ்விரண்டையும் பேணுவது அவசியமாகும்.

இந்தத் தொழுகைகளை நிறைவேற்றுபவர், பெரும்பாலும், சோம்பல் மற்றும் முகஸ்துதியை விட்டும் நீங்கியவராகவும், வணக்கத்தை விரும்புபவராகவும் இருப்பார்.

التصنيفات

தொழுகையின் சிறப்பு