'ஆடை கிழிந்து இத்துப்போவதை போன்று உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானும் குறைந்து பலவீனமடைந்து விடுகிறது. எனவே…

'ஆடை கிழிந்து இத்துப்போவதை போன்று உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானும் குறைந்து பலவீனமடைந்து விடுகிறது. எனவே உங்களின் ஈமானை புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்'

அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னில் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'ஆடை கிழிந்து இத்துப்போவதை போன்று உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானும் குறைந்து பலவீனமடைந்து விடுகிறது. எனவே உங்களின் ஈமானை புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள்'

[ஸஹீஹானது-சரியானது] [رواه الحاكم والطبراني]

الشرح

புதிய ஆடையை நீண்டகாலம் பாவிப்பதினால் பழையதாகி கிழிந்து போவது போல் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் காணப்படும் இறை நம்பிக்கையும் பலவீனம் அடைகிறது என நபியவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். இதற்கு வணக்கவழிபாட்டில் காணப்படும் சோர்வு நிலை அல்லது பாவகாரியங்ளில் ஈடுபடுதல், மனோ இச்சையில் மூழ்கிப்போதல் போன்றவை காரணங்களாகும். இதற்கு தீர்வாக, கட்டாயக் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலமும் அதிகம் திக்ர் மற்றும் பாவமண்ணிப்புக்கோருவதன் மூலமும் எமது ஈமானைப் புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நபியவர்கள் வழிகாட்டுகிறார்கள்.

فوائد الحديث

ஈமானில் உறுதியையும் ,உள்ளத்தில் ஈமானைப் புதுப்பிக்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு தூண்டியிருத்தல்.

ஈமான் என்பது சொல்,செயல்,நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்கும்.இறைவனுக்கு கட்டுப்படுவதால் ஈமான் அதிகரிக்கும், மாறு செய்வதால் அது குறைந்து விடும்.

التصنيفات

நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்