ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா…

ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்

இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸாரிப் பெண் ஒருவரை விழித்து -இப்பெண்ணின் பெயரை இப்னு அப்பாஸ் கூறினார்கள் ஆனால் நான் அவளுடைய பெயரை மறந்துவிட்டேன்.- 'எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு வருவதை உம்மை எது தடுத்தது?' என வினவியதற்கு அந்தப் பெண்மணி எம்மிடம் நீர் இரைக்கும் இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று கூறினாள். அப்பொழுது இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ரமழான் மாதம் வந்துவிட்டால் நீங்கள் உம்ராவை நிறை வேற்றுவாயாக ! ஏனெனில் அம்மாதத்தில் நிறை வேற்றப்படும் உம்ரா வணக்கம் ஹஜ்ஜு வணக்கத்துக்கு நிகராகும் என்று கூறினார்கள்

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் வதாஇலிருந்து திரும்பி வந்த பொழுது ஹஜ்ஜுவணக்கத்தை நிறை வேற்றாத அன்ஸாரிப் பெண்ணிடம் எம்முடன் ஹஜ்ஜு செய்வதற்கு உம்மை எது தடுத்தது? என வினவினார்கள் அதற்கு அவள் தமக்கு இரு ஒட்டகங்கள்தானிருந்தன. அவைகளில் ஒன்றில் தன் கணவரும் மகனும் ஹஜ்ஜுக்கு சென்றுவிட்டனர். மற்றதை நாம் நீர் இரைப்பதற்காக விட்டுச் சென்றனர் என்று காரணம் கூறினாள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'ரமழான் மாதம் உம்ரா வணக்கத்தை நிறை வேற்றுவதன் கூலி ஒரு ஹஜ்ஜுடைய கூலிக்கு சமம் என்று அப் பெண்ணிடத்தில் கூறினார்கள்.

فوائد الحديث

ரமழான் மாதத்தில் உம்ரா வணக்கத்தை நிறைவேற்றுவதன் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல்.

உம்ரா வணக்கத்தை ரமழான் மாதத்தில் நிறை வேற்றுவது ஹஜ்ஜுடைய நன்மைக்கு(ஈடாகும்) சமமாகும்.

கால நேரங்களின் சிறப்புக்கள் அதிகரிப்பின் காரணமாக அமல்களின் (பிரதிபலன்கள்) கூலிகள் அதிகரிக்கும் (என்பது பொது விதி) ரமழான் மாதத்தில் அமல்கள் புரிவதும் இப்பொது விதியைச் சார்ந்ததே.

التصنيفات

ஹஜ், உம்ராவின் சிறப்பு