தொடக்கு ஏற்பட்ட ஒருவர் வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்.

தொடக்கு ஏற்பட்ட ஒருவர் வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்.

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) கூறுகின்றார்கள் : "தொடக்கு ஏற்பட்ட ஒருவர் வுழூச் செய்யும் வரை உங்களில் ஒருவருடைய தொழுகையை அல்லாஹ் ஏற்க மாட்டான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

தொழத் தயாராகுபவருக்கு அதில் அழகான தோற்றத்தில், சுத்தமான நிலையில்தான் நுழைய வேண்டுமென இறைவன் வழிகாட்டியுள்ளான். ஏனெனில் இது இரட்சகனுக்கும் அவனது அடியானுக்கும் இடையிலான பலமான தொடர்பாகும், அவனுடன் உரையாட இதுவே வழியாகும். இதனால்தான் வுழூச் செய்து, சுத்தமாகும்படி அவனுக்கு ஏவியுள்ளான். சுத்தமின்றி தொழுகை ஏற்கப்படாது தட்டப்படும் எனக் கூறியுள்ளார்கள்.

فوائد الحديث

தொழுகையின் முக்கியத்துவத்தை உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது, அதனை அல்லாஹ் சுத்தமின்றி ஏற்க மாட்டான்.

தொடக்குள்ளவர் சிறிய, பெரிய இரு தொடக்குகளிலிருந்தும் சுத்தமாகும் வரை அவருடைய தொழுகை ஏற்கப்படமாட்டாது.

தொடக்கு வுழூவை முறிக்கக் கூடியதாகும், தொழுகையில் இருக்கும் போது ஏற்பட்டால் தொழுகை முடிந்து விடும்.

இங்கு ஏற்கப்படமாட்டாது என்பதன் அர்த்தம் செல்லுபடியாக மாட்டாது என்பதாகும்.

தொழுகையில் ஏற்கப்பட்டது, தட்டப்பட்டது என இரு வகைகள் உண்டு என்பதை இந்த நபிமொழி அறிவிக்கின்றது, மார்க்க சட்டத்திற்கு உடன்பட்டது ஏற்கப்படும், முரண்பட்டது மறுக்கப்படும். இவ்வாறு தான் அனைத்து வணக்கங்களுமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "எமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை ஒருவர் செய்தால் அது மறுக்கப்படும்".

தொடக்குள்ளவர் வுழூச் செய்யும் வரை தொழுவது ஹராமாகும். ஏனெனில் அல்லாஹ் அதனை ஏற்க மாட்டான். அல்லாஹ் ஏற்காத ஒன்றின் மூலம் அவனை நெருங்க முற்படுவது அவனை எதிர்ப்பதும், பரிகாசிப்பதுமாகும்.

ஒருவர் ஒரு தொழுகைக்காக வுழூச் செய்து, பின் அதே வுழூவுடன் இருக்கும் போதே அடுத்த நேரத் தொழுகை வந்து விட்டால் மற்றுமொரு தடவை வுழூச் செய்யத் தேவையில்லை.

கடமையான, ஸுன்னத்தான, ஜனாஸா எத்தொழுகையாயினும் தொடக்குடையவர் மறதியாகத் தொழுதாலும் கூட வுழூச் செய்யும் வரை ஏற்கப்படமாட்டாது. அதே போன்று குளிப்புக் கடமையானவரும் குளிக்க முன் தொழுகை ஏற்கப்பட மாட்டாது. மறதியாகத் தொழுதவர் அதனை மீட்ட வேண்டும்.

التصنيفات

வுழூ