பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்

பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா கூறுகின்றார்கள் : "பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்."

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பிறப்பு மற்றும் உறவு முறையின் மூலம் மணம் முடிக்கத் தடைசெய்யப் பட்டவர்களான தந்தையின் சகோதரர்கள் தாயின் சகோதரர்கள் அல்லது சகோதரன் ஆகியோர் பால் குடி உறவாலும் மணம் முடிக்க தடைசெய்யப்பட்டோர் என தெளிவு படுத்துகிறார்கள். அதே போன்று பிறப்பினால் அனுமதிக்கப்படுகின்ற சட்டதிட்டங்கள் யாவும் பால்குடி உறவுக்கும் பொருந்தும்.

فوائد الحديث

பால் குடி உறவு முறை சட்டங்கள் பற்றி தெளிவுபடுபடுத்தும் ஒரு அடிப்படையாக இந்த ஹதீஸ் காணப்படுகின்றது.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில் : 'பிறப்பால் ஏற்பட்ட (இரத்த) உறவால் மணமுடிக்கத் தடை விதிக்கப்பட்டவர்கள், பால்குடி உறவாலும் தடை விதிக்கப்படுவர்' என்ற நபிகளின் கூற்றானது பிறப்பால் அனுமதிக்கப்பட்டவை யாவும் பால்குடி உறவு முறைக்கும் அனுமதிக்கப்படுகிறது என்பதை குறிப்பிடுகிறது. அத்துடன் திருமணம் மற்றும் அது சார்ந்த விடயங்கள் ஹராமாக்கப்படுதல், பால் அருந்திய சிசுவிற்கும் பாலூட்டிய தாயின் குழந்தைளுக்குமிடையில் அன்யொன்னிய உறவு ஏற்படுதல், அவர்களைப் பார்ப்பது, தனிமையில் இருப்பது மற்றும் பயணம் செல்வது போன்றவற்றில் அனுமதி தொடர்பாக அவர்களின் உறவுகளைப் போல நடத்தப்படுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த கருத்து காணப்படுகிறது. இருப்பினும் இதன் விளைவாக தாய்மைக்குரிய சட்டங்களான பரஸ்பர சொத்துரிமை, கட்டாயப் பராமரிப்பு, உரிமையின் மூலம் விடுதலை செய்தல், சாட்சியம் கூறுதல், பழிவாங்களை தவிர்த்தல் போன்ற சட்டதிட்டங்கள் இதற்கு பொருந்தமாட்டாது.

பால் குடி உறவுமுறையின் திருமணம் முடித்தல் நிரந்தர தடையாகும் என்ற சட்டத்தை உறுதிப்படுத்தல்.

ஏனைய ஹதீஸ்கள் பால்குடி உறவு முறையை உறுதிப்படுத்தும் முறையை குறிப்பிடுகிறது. அதாவது குறிப்பிட்ட குழந்தை ஐந்து தடவைகள் குடித்திருக்க வேண்டும். அது இரண்டு வயதிற்குள் நிகழ்திருக்க வேண்டும்.

உறவு முறை மூலம் தடைசெய்யப்பட்டோர்: தாய்மார்கள் உட்பட தாய் அல்லது தந்தை வழியிலான பாட்டிகள், மேல் நோக்கிய பரம்பரை உறவுகள். இதில் பெற்றெடுத்த (அல்லது உங்கள் தந்தையின் மனைவியரான) தாய்களும் அடங்குவர்.

புதல்வியர்: புதல்வியின் புதல்விகள் மற்றும் மகனின் புதல்விகள் என கீழ்நோக்கிச் செல்லும் பரம்பரை உறவுகள்.

சகோதரிகள் அது தாய்வழி மற்றும் தந்தை வழி சகோதரிகள் : அல்லது இருவர்களில் ஒருவர் வழியாக வந்த சகோததரிகள்

மாமியார்கள் : அதாவது தந்தையின் உடன் பிறந்த உடன் பிறவா சகோதரிகளிகள், அதே போன்று உமது பாட்டனின் சகோதரிகள் அடங்குவர். இது மேல்நோக்கிச் செல்லும் உறவுகள்.

தாயின் சகோதரி (பெரியம்மா சாச்சி)கள் : இவர்கள் அல்லாதோர் பாட்டிகளின் சகோதரிகள் மேல் நோக்கிச் செல்லும் பரம்பரை உறவுகள். இது தாய்வழியாக அல்லது தந்தைவழியாக இருப்பினும் சரியே! அதே போன்று சகோதரனின் புதல்வியர் சகோதரியின் புதல்வியர் அவர்களின் புதல்வியர்கள் இவ்வாறு கீழ்நோக்கிச் செல்லும் உறவுகள் அடங்குவர்.

பால் குடி உறவு முறையின் மூலம் ஹராமாக்கப்படுவோர்: அதாவது பரம்பரை உறவு மூலம் ஹராமாக்கப்படுவோர் யாவரும் பால் குடி முறையின் மூலமும் ஹராமாக்கப்படுவர். இந்த வகையில் பரம்பரை மணம் முடிக்க தடுக்கப்படும் பெண்கள் யாவரும் பால் குடி முறை மூலமும் தடுக்கப்படுவர். என்றாலும் பால் குடி மூலமான சகோதரனின் தாய் மற்றும் அவனின் மகனின் சகோதரி இவர்கள் மணம் முடிக்கத் தடுக்கப்பட்டோர் அல்லர்.

التصنيفات

பால்குடி