إعدادات العرض
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான…
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) ஆண் துணையின்றி (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கும் எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மஹ்ரமான (மணமுடிக்கத்தகாத) ஆண் துணையின்றி (தனியாக) மேற்கொள்ள வேண்டாம்.
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Français Indonesia Русский Tagalog Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Português Kurdî සිංහල Kiswahili Tiếng Việt অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ಕನ್ನಡ Svenska Македонски ไทย Українська తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy پښتو ភាសាខ្មែរ Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
ஒரு முஸ்லிம் பெண் மஹ்ரம் இல்லாமல் ஒரு இரவுக்கு மேல் பயணம் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகிறார்கள்.فوائد الحديث
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 'ஹஜ், உம்ரா அல்லது முஸ்லிம் அல்லாத நாட்டிலிருந்து முஸ்லிம் நாட்டிற்கு தப்பிச் செல்வதைத் தவிர, பெண்கள் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது என்று அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது. சில அறிஞர்கள் ஒரு பெண்ணுக்கு மஹ்ரம் இருக்க வேண்டும் என்பதை ஹஜ்ஜின் நிபந்தனையாகக் கருதுகின்றனர்'.
இஸ்லாமிய சட்டம் பரிபூரணத்தன்மைவாய்ந்தது என்பதற்காக சான்றாக இது காணப்படுகின்றமை. அதாவது பெண்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்லாமிய சட்டவியல் பரிந்துரைக்கிறது.
அல்லாஹ்வின் மீதும் இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வது, அல்லாஹ்வின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும், அதன் வரையறைகளுக்குள் நிற்கவும் ஒருவரைத் கட்டாயப்படுத்துகிறது.
ஒரு பெண்ணின் மஹ்ரம் என்பது அவளுடைய கணவன் மற்றும் நெருங்கிய அவளின் குடும்ப உறவுகள், பால் குடி உறவுகள் மற்றும் திருமண உறவுகள் காரணமாக நிரந்தரமாக திருமணம் செய்து கொள்ளத் தடைசெய்யப்பட்ட ஆண்களாகும். மஹ்ரமாக செல்பவர் முஸ்லிமாகவும், பருவவயதை அடைந்தவராகவும், புத்திசாலியாகவும், நம்பகமானவராகவும், பொறுப்பானவராகவும் இருக்க வேண்டும். பயணத்தில் ஒரு பெண்ணுடன் மஹ்ரம் இருக்க வேண்டும் என்பதறகான நோக்கம் அவளைப் பாதுகாப்பதும், அவளுக்குப் பாதுகாப்பை வழங்குவதும் அவளுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதுமாகும்.
பெண்கள் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்யக் கூடாது பற்றி வந்துள்ள பயணத்தின் கால அளவு பற்றிய ஹதீஸ்கள் குறித்து இமாம் பைஹகி (ரஹ்) கூறியதாவது: 'சுருக்கமாக குறிப்பிடுவதாயின், ஒரு பெண் பயணம் என்று அழைக்கப்படும் எந்தவொரு பயணத்தையும் மஹ்ரம் இல்லாமல் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அது மூன்று நாட்கள், இரண்டு நாட்கள், ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவன சாதராண தூரமாக இருந்தாலும் சரியே!. இதற்கு
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களால் அறிவிக்கப் பட்டுள்ள பயணம் குறித்த பொதுவான ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு இமாம் முஸ்லிம் பதிவு செய்துள்ள இது தொடர்பான இறுதி அறிவிப்பாக உள்ளது. அதில் , நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒரு பெண் மஹ்ரம் இல்லாமல் பயணம் செய்ய வேண்டாம்.' இது அனைத்து பயணங்களையும் உள்ளடக்கிய ஒரு கூற்றாகும். இருப்பினும், (ஒரு இரவு, ஒரு பகல் மற்றும் இரவு அல்லது மூன்று நாட்கள் போன்ற கால அளவைத் தெளிவாகக் கூறும்) அறிவிப்புகள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி கேட்டவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர்களின் சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் நாட்டைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்டதாகும்.
