கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப்…

கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : கன்னங்களில் அடித்துக்கொள்பவர்கள், ஆடைகளைக் கிழித்துக்கொள்பவர்கள், ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களைக் கூறுபவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி (ஸல்) அவர்கள், சில ஜாஹிலிய்யாக் கால செயற்களை எச்சரித்துத் தடுக்கின்றார்கள். அவர்கள் கூறுகின்றார்கள் : முதலாவது : கன்னத்தில் அறைந்துகொள்பவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்ல. கன்னத்தைக் குறித்துச் சொல்வதற்கான காரணம், பெரும்பாலும் அவ்வாறு நடப்பதால் தான். எனவே, முகத்தின் ஏனைய பகுதிகளும் இந்தத் தடையினுள் நுழையும். இரண்டாவது : ஆடையின் திறக்கப்படும் பகுதியைக் கிழித்து, பொறுமையின்மையின் உச்சகட்டமாகத் தமது தலையை அதில் நுழைத்துக் கொள்பவர்கள். மூன்றாவது : ஜாஹிலிய்யாக் கால வார்த்தைப் பிரயோகங்களாகிய, கேடு உண்டாகட்டும், அழிவு உண்டாகட்டும் என்று பிரார்த்தித்தல், ஒப்பாரி வைத்தல், புலம்புதல் போன்றவற்றைச் செய்தல்.

فوائد الحديث

ஹதீஸில் வந்தள்ள இந்த எச்சரிக்கை, இந்த செயல்கள் பெரும்பாவங்கள் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

சோதனைகளின் போது பொறுமையாக இருப்பது கட்டாயமாகும். துன்பம் தரும் அல்லாஹ்வின் ஏற்பாடுகளின் போது ஆத்திரப்படுவதோ, ஒப்பாரி, புலம்பல், முடியை சிறைத்தல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல் போன்றவற்றின் மூலம் ஆத்திரத்தை வெளிக்காட்டுவதோ தடுக்கப்பட்டதாகும்.

ஜாஹிலிய்யாக் கால வழமைகளில், மார்க்கம் சரிகாணாதவற்றைப் பின்பற்றுவது தடுக்கப்பட்டதாகும்.

கவலைப்படுவதும், அழுவதும் குற்றமாகமாட்டாது. அல்லாஹ்வின் ஏற்பாட்டைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்வதற்கு அது முரணாகமாட்டாது. மாறாக, அது, உறவினர்கள் மற்றும் அன்பர்களின் உள்ளங்களில் அல்லாஹ் வைத்துள்ள இரக்க குணமாகும்.

ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் விதியைத் திருப்தியோடு ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு பொருந்திக்கொள்ளாவிட்டாலும், பொறுமையாக இருப்பது கட்டாயமாகும்.

التصنيفات

ஜாஹிலிய்ய விடயங்கள்