ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக்…

ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறுகின்றார்கள் : "ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். இவ்வாறு அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து அவன் உங்களிடம் விசாரணை செய்(யும் நிலையை நீங்கள் ஏற்படுத்)திட வேண்டாம். ஏனெனில், அவன் தன் பொறுப்பிலுள்ள ஒன்றைக் குறித்து ஒருவரிடம் விசாரிக்கத் தொடங்கினால், அதைக் கண்டுபிடித்தே தீருவான். பின்னர் (வரம்பு மீறி நடந்துகொண்ட) அவனை நரக நெருப்பில் அல்லாஹ் முகங்குப்புறத் தள்ளிவிடுவான்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஸுப்ஹுத் தொழுகையைத் தொழுதவர் அல்லாஹ்வின் பொறுப்பில் பிரவேசித்து விட்டார், அவருக்கு யாராலும் எவ்விதத் துன்பமும் நேர்ந்திடாமலிருக்க அல்லாஹ்வுடன் ஓர் உடன்படிக்கை செய்தவரைப் போலாவார். எனவே அவரை யாரும் நோவினைப் படுத்தலாகாது, அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் மீது வரம்பு மீறுவதாகவும், இத்தொழுகையாளிக்கு அவன் வழங்கியுள்ள பாதுகாப்பு உடன்படிக்கையை முறிப்பதாகவும் கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் உடன்படிக்கையை முறித்து, அத்துமீறுபவன் அவனுடன் போரிட தன்னை உட்படுத்திக் கொண்டவனாவான். அல்லாஹ் தனது பாதுகாப்பிலுள்ள ஒருவர் துன்புறுத்தப்படும் போது அவனுக்காகப் பழிதீர்க்கின்றான்.

فوائد الحديث

பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம், அதன் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.

ஸுப்ஹுத் தொழுதவரை நோவினைப்படுத்துவது தொடர்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் வரையறைகள், தடைகளைப் பேணுவது அடியானைப் பாதுகாத்து, உதவி செய்வதற்கான காரணமாகும்.

التصنيفات

தொழுகையின் சிறப்பு