இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக!…

இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: இந்தக் குர்ஆனை மனனமிட்டு (அதை ஓதி ) பேணி வாருங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் (நினைவிலிருந்து) மறந்து விடக் கூடியதாகும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இந்த ஹதீஸில் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனமிட்ட ஒருவர் அது மறந்து விடாதிருக்க தொடரந்தும் ஓதி வருமாறு கட்டளைப் பிரப்பித்துள்ளார்கள். இதனை நபியவர்கள் கட்டிவைக்கப்பட்ட ஒட்டகை அவிழ்த்து விடப்பட்டதும் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதைவிடவும் மிகவும் வேகமாக அல்குர்ஆன் மறந்துவிடும் என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே அதனைப்பேணி ஓதி வந்தால் அது அவருடன் இருக்கும், இல்லாது விட்டால் அவறிடமிருந்து மறைந்து விடும்.

فوائد الحديث

அல்குர்ஆனை மனமிட்ட ஒருவர் முறையாக பேணி ஓதி வருகிறவருடைய உள்ளத்தில் அல்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட நிலையில் இருக்கும் இல்லாவிட்டால் அது அவரைவிட்டும் நீங்கி மறந்துவிடும்.

அல்குர்ஆனை பேணி ஓதிவருவதால் கிடைக்கும் பயன்கள் : கூலி, வெகுமதி, மறுமையில் அந்தஸ்த்து உயர்த்தப்படுதல் போன்றன.

التصنيفات

குர்ஆனைப் பராமரிப்பதன் சிறப்பு