ஈமான் எழுபத்து சொச்சம், அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும்.

ஈமான் எழுபத்து சொச்சம், அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ஈமான் (இறைநம்பிக்கை) என்பது ஒரு விடயமோ, ஒரேயொரு கிளையைக் கொண்டதோ அல்ல, மாறாக அது எழுபத்து சொச்சம், அல்லது அறுபத்து சொச்சம் கிளைகளைக் கொண்டதாகும். அதில் சிறந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். இலகுவானது பாதையில் நடப்போரைத் துன்புறுத்தும் கற்கள், முற்கள் போன்ற அனைத்தையும் நீக்குதலாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும்.

فوائد الحديث

ஈமான் பல படித்தரங்களைக் கொண்டது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் சிலது சிலதை விட மேலானதாகும்.

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரிடத்தில் ஈமான் என்பது சொல், செயல், நம்பிக்கை அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

நற்செயல்களுக்கான உந்துசக்தியாகவும், வரையறையாகவும் ஈமானே உள்ளது.

ஈமான் பல கூறுகளைக் கொண்டது, இதனால் அது கூடவும், குறையவும் செய்யும்.

ஈமான் முயற்சித்துப் பெறப்படும் ஒரு விடயமாகும்.

வெட்கத்தின் சிறப்பு, அதனை உருவாக்கிக் கொள்வதை ஊக்குவித்தல்.

التصنيفات

நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்