'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார்.…

'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : 'இறைத்தூதர் அவர்களே! 'நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்தவற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப் படுவோமா?' என ஒருவர் கேட்டதற்கு, 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தினுள் (இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதன்) நுழைவதன் சிறப்பை இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகிறார்கள். இஸ்லாத்தை தழுவிய ஒருவர் இஸ்லாத்தை சிறப்பான முறையில் கடைப்பிடித்தொழுகி, அல்லாஹ்வை மாத்திரம் நோக்காக்கொண்டு கலப்பற்ற எண்ணத்துடன்; எல்லாக்காரியங்களை மேற்கொள்பவராகவும் ,தமது சொல் மற்றும் செயல்களில் உண்மையாளராகவும் இருந்தால் அவர் ஜாஹிலிய்யா (அறியாமைக்) காலத்தில் செய்த பாவகாரியங்களுக்காக விசாரிக்கப்படமாட்டார். யார் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றதன் பின் நயவஞ்சகனாக, அல்லது இஸ்லாம் மார்க்கத்தை துறந்து சென்று, இஸ்லாத்தை துவம்சம் செய்யும் முகமாக நடந்து கொள்கிறானோ, இவ்வாறான ஒருவன் இஸ்லாத்தை ஏற்காதிருந்த போது செய்தவற்றிற்காகவும், இஸ்லாத்தை ஏற்றதன் பின் செய்தவைகளுக்காகவும் மறுமையில் விசாரிக்கப்படுவான்!

فوائد الحديث

ஸஹாபாக்கள் தாம் ஜாஹிலிய்யாக்காலத்தில் செய்த செயற்பாடுகளுக்காக மறுமையில் விசாரிக்கப்படுவது குறித்து பயந்தமையும் அந்த விவகாரத்தில் அவதானமாய் இருந்தமையும்.

இஸ்லாத்தின் மீது பற்றுடன் இருப்பதற்கு தூண்டுதல் -(வலியுறுத்தல்)

இஸ்லாத்தை ஏற்பதன் சிறப்பை இந்த ஹதீஸ் குறிப்பிடுவதோடு, அது முன்னைய பாவகாரியங்களுக்கான பரிகாரமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்லாத்தை துறந்து மதம் மாறியவர் மற்றும் நயவஞ்சகன் ஆகியோர் தாம் இஸ்லாத்தை ஏற்க முன் செய்த செயற்பாடுகளுக்கும், இஸ்லாத்தை ஏற்ற பின் செய்த குற்றங்களுக்கும் விசாரணை செய்யப்படுவர்.

التصنيفات

இஸ்லாம், நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும்