إعدادات العرض
நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே!…
நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். (ஒருநாள்) அவர்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகிற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுகிற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)'' என்று கூறினர். அப்போது, '(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். மேலும், அல்லாஹ் தடுத்த எந்தவோர் உயிரையும் நியாயமின்றி கொலைசெய்யவும் மாட்டார்கள், மேலும் விபச்சாரம் செய்யவும் மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆனின் 25:68 வது) வசனம் அருளப்பெற்றது. மேலும், '(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொள்ளாதீர்கள்.. எனும் (திருக்குர்ஆனின் 39:53 வது) வசனமும் அருளப்பெற்றது.
الترجمة
العربية English မြန်မာ Svenska Čeština ગુજરાતી አማርኛ Yorùbá Nederlands اردو Bahasa Indonesia ئۇيغۇرچە বাংলা Türkçe සිංහල हिन्दी Tiếng Việt Hausa తెలుగు Kiswahili ไทย پښتو অসমীয়া دری Кыргызча Lietuvių Kinyarwanda नेपाली മലയാളം Bosanski Italiano ಕನ್ನಡ Kurdî Oromoo Română Shqip Soomaali Српски Wolof Moore Українська Tagalogالشرح
கொலை விபச்சாரம் போன்ற விடயங்களில் அதிகம் ஈடுபட்ட இணைவைப்பாளர்களில் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து நீங்கள் அழைக்கும் இஸ்லாம் அதன் போதனைகள் யாவும் மிகவும் சிறந்த விடயங்ளாகும். ஆனால் நாம் இணைவைப்பு மற்றும் பெரும்பவாங்களில் வீழ்த்துள்ளோம், அதனால் எமது நிலை எவ்வாறு அமையப் போகிறது? அதற்கு குற்றப்பரிகாரம் ஏதும் உண்டா என வினவினார்கள். அவ்வேளையில் மேற்படி இரண்டு வசனங்களும் இறங்கின. அதில் மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்திருப்பினும் அவை எவ்வளவு பெரியதாக உள்ள போதும் அதற்கான தீர்வாக தவ்பாவை ஏற்படுத்தி அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என உத்தரவாதப் படுத்தியுள்ளான். அவ்வாறு அல்லாஹ் அவகாசம் அளிக்காதிருந்தால் அந்த இணைவைப்பாளர்கள் அவர்களின் இறைநிராகரிப்பிலும், அத்துமீறல்களில் தொடர்ந்து இருந்திருப்பார்கள் அது மாத்திரமல்லாது இந்த மார்க்கத்தினுள் நுழைந்திருக்கவும் மாட்டார்கள்.فوائد الحديث
இஸ்லாத்தின் மேன்மையும் சிறப்பும் இந்த ஹதீஸில் சுட்டிக்காட்டப் படுவதோடு, இஸ்லாத்தை ஏற்கமுன் செய்த பாவங்களை இஸ்லாம் அழித்து விடுகிறது என்ற நன்மாராயமும் உள்ளடங்கியுள்ளது.
தனது அடியார்களுடனான கருணை, மற்றும் மன்னிப்பின் எல்லையற்ற தன்மையை பிரதிபலிக்கின்றமை.
இணைவைப்பு,நியாயமான காரணமின்றி ஒரு உயிரைக் கொல்லுதல்,விபச்சாரம் செய்தல் போன்றன ஹராமாக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறான பாவங்களைச் செய்வோருக்கான எச்சரிக்கையையும் இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளது.
உளத்தூய்மை மற்றும் நல்ல அமல்களுடன் இணைந்த தூய்மையான தவ்பாவானது அல்லாஹ்வை நிராகரித்தல் முதலான பெரும்பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுகிறது.
அல்லாஹ்வின் அருளில் அவநம்பிக்கை கொள்ளுதல், நிராசையடையதல் போன்றன ஹராமாகும்.