''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய …

''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான்

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவித்துள்ளார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் உரை நிகழ்த்தினார்கள். அதில் அவர்கள் கூறினார்: ''மக்களே, நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து ஜாஹிலிய்யாவின் ஆணவத்தையும், முன்னோர்களைப் பற்றிய பெருமைகொள்வதையும் நீக்கிவிட்டான். ஆகவே தற்போது இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: அல்லாஹ்வின் பார்வையில் நேர்மையான, பக்தியுள்ள மற்றும் கண்ணியமான நபர். அல்லாஹ்வின் பார்வையில் ஒரு பொல்லாத, பரிதாபத்திற்குரிய, அற்பமான மனிதர். மக்கள் ஆதமின் பிள்ளைகளாவர், அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். அல்லாஹ் கூறுகிறான்: மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன். (ஹுஜுராத் : 13).

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட தினத்தில் உரைநிகழ்த்தினார்கள், அதில் அவர்கள் : மக்களே நிச்சயமாக அல்லாஹ் ஜாஹிலிய்யக்கால ஆணவத்தையும், வீராப்புக்கொள்வதையும், தங்களின் மூதாதையர்களின் பெருமை பேசுவதையும் உங்களை விட்டும் அகற்றிவிட்டான். ஆகையால் மக்கள் இரு வகையினராவர். முதலாமவர் : அல்லாஹ்வுக்கு பணிந்து கட்டுப்பட்டு நடக்கும் நேர்மையான, பக்தியுள்ள முஃமின், இவர் மக்களிடத்தில் உயர்பரம்பரை மற்றும் உயர் குலத்தை சார்ந்தவாராக இல்லாது விட்டாலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியவராவார். இரண்டாமவர் : ஒழுக்கக்கேடான அல்லாஹ்வை நிராகரித்த துஷ்டன், இவன் உயர் குலமும் புகழும் அதிகாரமும் மிக்கவனாக திகழ்ந்தாலும் அல்லாஹ்விடத்தில் அட்பமான மிகப்பரிதாபமானவனாகவே இருப்பான். இவனுக்கு எந்த மதிப்பும் கிடையாது. மனிதர்கள் அனைவரும் ஆதமின் சந்ததியாவார்கள். அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஆகவே எவரின் அசல் -அடிப்படை- மண்ணாக இருக்கிறதோ அவர் பெருமையடித்தல் தற்பெருமைக்கொள்ளல் போன்ற விடயங்களுக்கு அருகதையற்றவர். இதனை பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது : 'மனிதர்களே, நாங்கள் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்து நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்வதற்காக கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிகவும் பயபக்கதியுடையவரே அல்லாஹ்வின் முன் உங்களில் மிகவும் கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், நுட்பமானவன்'. (ஹுஜுராத் : 13).

فوائد الحديث

பரம்பரை, மூதாதையர் மரபு ஆகியவற்றினால் தற்பெருமை கொள்வது தடுக்கப்பட்டிருத்தல்.

التصنيفات

இஸ்லாத்தின் சிறப்பும் சிறப்பம்சங்களும், இஸ்லாமிய மார்க்கத்தின் பொதுமை, இஸ்லாத்தில் மனித உரிமைகள், வசனங்களின் விரிவுரை