إعدادات العرض
பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி…
பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்
அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : பெண்களின் ஆடையை அணியும் ஆண்களையும், ஆண்களின் ஆடையை அணியும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.
[சரியானது] [குப்ராவில் இமாம் நஸாஈயும், இமாம் இப்னு மாஜா அதே பொருளிலும், இமாம் அஹ்மதும் இதை பதிவு செய்துள்ளனர்]
الترجمة
العربية বাংলা Bosanski English Español فارسی Indonesia Tagalog Türkçe اردو 中文 हिन्दी Tiếng Việt සිංහල ئۇيغۇرچە Hausa Kurdî Português Kiswahili অসমীয়া ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Русский Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ Malagasy Українська ភាសាខ្មែរ ಕನ್ನಡ Svenska پښتو Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து பெண்களைப் போல் ஒத்திருக்கும் ஒவ்வொரு ஆண் மீதும் அவர்கள் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட வேண்டி துஆ செய்தார்கள். அணியும் ஆடையானது வடிவம், நிறம், அணியும் முறை, அலங்காரம் அல்லது வேறு எந்த விதத்திலாயினும் பெண்களைப் போல் ஒத்திருப்பின் இந்த நபியவர்களின் சாபத்திற்கு உள்ளாகுவார். அதுபோலவே, ஆண்களுக்கே உரிய ஆடைகளை அணிந்து ஆண்களைப் போல் ஒத்திருக்கும் பெண் மீதும் இதே எச்சரிக்கை உள்ளது. இது பெரிய பாவங்களில் ஒன்றாகும்.فوائد الحديث
இமாம் அஷ்ஷவ்கானி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பெண்கள் ஆண்களைப் போல் நடந்து கொள்வதும், ஆண்கள் பெண்களைப் போல் நடந்து கொள்வதும் தடைசெய்யப்பட்டதாகும்; (ஹராமாகும்). ஏனெனில் சாபமிடுதல் என்பது தடைசெய்யப்பட்ட செயலில் மாத்திரமே இருக்கும்.
ஆடைவிடயத்தில் இருவருக்கும் பொதுவாக இருப்பவைகளில் — உதாரணமாக, ஆண்களும் பெண்களும் அணியும் சில பனியன்கள் (உள் சட்டைகள்) போன்றவற்றில் எவ்விதப் பிரச்சினையும் கிடையாது என அஷ்ஷேய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
