ஜிஹாதில் மிகவும் சிறந்தது அநியாயக்கார அரசனிடத்தில் நீதியை எடுத்துரைப்பதாகும்

ஜிஹாதில் மிகவும் சிறந்தது அநியாயக்கார அரசனிடத்தில் நீதியை எடுத்துரைப்பதாகும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அபூ ஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : "ஜிஹாதில் மிகவும் சிறந்தது அநியாயக்கார அரசனிடத்தில் நீதியை எடுத்துரைப்பதாகும்".

[பிரிதொன்றின் மூலம் நம்பகமாக மாறியது (ஹஸன் லிஹைரிஹி) என்ற தரத்தைப் பெற்றது] [இமாம்களான அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, அஹ்மத் ஆகியோர் இதனை பதிவு செய்துள்ளனர்]

الشرح

அநீதியான மற்றும் அடக்குமுறை ஆட்சியாளர் அல்லது இளவரசருக்கு முன்பாக நீதி மற்றும் உண்மையின் வார்த்தையைப் பேசுவதே சர்வவல்லமையுள்ள இறைவனின் பாதையில் செய்யும் ஜிஹாதின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நன்மை பயக்கும் வடிவங்களில் ஒன்று என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கினர். ஏனென்றால், அது சரியானதைக் கட்டளையிட்டு, தவறானதைத் தடை செய்யும் சடங்கின்படி செயல்படுவதை உள்ளடக்கியது, அது வார்த்தையாலோ, எழுத்தாலோ, செயலாலோ அல்லது வேறு எதாவதாலோ நன்மையை அடைந்து தீங்கைத் தடுக்கும்..

فوائد الحديث

நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் ஜிஹாத் அறப்போர் ஆகும்.

ஆட்சியாளருக்கு அறிவுரை கூறுவது மிகப்பெரும் ஜிஹாதின் மிகப்பெரும் வடிவங்களில் ஒன்றாகும் ஆனால் இதனை அறிவார்ந்த ரீதியில் ஞானத்துடனும் நிதானத்துடன் மேற்கொள்ளுதல் வேண்டும்.

அல்-கத்தாபி கூறுகிறார்: எதிரியை எதிர்த்துப் போராடுபவர் பயம் மற்றும் எதிர்பார்ப்பு இரண்டுக்கும் மத்தியில் தான் தோல்வியடைவேனா அல்லது வெற்றிபெறுவேனா என்ற தீர்க்கமான முடிவு குறித்து தயக்கத்துடன் இருப்பதால் இது சிறந்த ஜிஹாதாக கருதப்படுகிறது. ஆட்சியாளருக்கு முன்பாக உண்மையைப் பேசுபவர் அவரால் கண்டிக்கப்படலாம். ஆட்சியாளருக்கு முன்பாக உண்மையைப் பேசுவதும், நன்மையை ஏவுவதும், ஒரு வகையில், தன்னைத்தானே பெரு ம் அழிவிலும் ஆபத்திலும்; ஆழ்த்துவதாகும். இதில் அச்சம் மிகைத்து காணப்படுவதால் ஜிஹாதின் வகைகளுள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அநியாயக்கார ஆட்சியாளரிடம் நேரிய வார்த்தை பேசுவது ஜிஹாதின் வகைகளுள் மிகவும் சிறந்தாக இருப்பதற்கான இன்னொரு காரணம், ஆட்சியாளர் அக்குறித்த நபரின் அறிவுரை வார்த்தையை ஏற்று அமுல்படுத்தினால் அதன் நன்மை மிகப்பெரும் தொகையினருக்கு சென்றடையும். இதனால் நலன்கள் அடையப்பெரும்.

التصنيفات

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலின் சிறப்பு