'யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பற்றி…

'யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பற்றி போர்செய்தவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார்

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் ரழியல்லாஹு அவர்கள் அறிவிப்பதாவது : 'யார் இறைவழியில் போர் புரியும் ஒருவருக்குப் பயண வசதி செய்துகொடுக்கிறாரோ அவரும் அறப்போரில் பங்கு பற்றி போர்செய்தவராவார். யார் அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்றபின் அவரது வீட்டாரின் நலன் காக்கின்றாரோ அவரும் அறப்போரில் பங்கு பெற்றவராவார்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

'யார் ஒருவர் அறப்போரில் கலந்து கொள்ளும் ஒருவருக்கு பயணம் மற்றும் போருக்கு மிகவும் தேவையான ஆயுதம்,வாகனம்,செலவு போன்ற ஏனைய விடயங்களை பொறுப்பேற்று அவற்றை ஒழுங்கு செய்து தயார்படுத்திக்கொடுக்கிறாரோ அவரும் ஒரு போராளியின் அந்தஸ்த்தில் இருக்கிறார் அவருக்கும் போரில் கலந்து கொள்ளும் போராளியின் அதே கூலி கிடைக்கும். அறப்போரில் கலந்து கொள்ளச்சென்ற ஒருவரின் விவகாரத்தை பொறுப்பேற்று அவரின் குடும்ப விவகாரங்களை கவனித்து வருபவரும் அறப்போராளியின் அந்தஸ்த்தைப் பெற்றவராக இருக்கிறார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள்.

فوائد الحديث

முஸ்லிம்கள் தக்களுக்கு மத்தியில் நல்லவிடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புடன் நடந்து கொள்ள ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

முஸ்லிம்களின் நலன்களில் ஈடுபடுவோருக்கு அல்லது அவர்களின் முக்கிய விவகாரங்களை மேற்கொள்வோருக்கு உபகராமும் உதவியும் வழங்க வேண்டும் என இந்த ஹதீஸ் குறிப்பிடுவதாக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றை (நற்காரியமொன்றை) செய்ய பிறருக்கு உதவும் ஒருவருக்கு அதே போன்ற கூலி உண்டு. இது அக்கடமையை செய்தவரின் கூலியில் எதையும் குறைத்துவிடாது என்பது இஸ்லாத்தின் ஒரு பொது விதியாகும். (ஒரு நன்மையான காரியத்தை செய்ய ஒத்துழைத்த ஒருவருக்கும், அதைச்செய்தவருக்கும் சரிநிகரான கூலி உண்டு என்பது ஒரு பொது விதியாகும்.)

التصنيفات

போரின் சிறப்பு