பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர்…

பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்

உம்முல் முஃமினீன ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: பெருந்துடக்குடன் இருந்த நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்போம். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை (துணி கட்டிக்கொள்ளுமாறு) பணிப்பார்கள். அவ்வாறே நான் கீழாடை அணிந்து கொள்வேன். அப்போது அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள் . நபியவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல்) 'இஃதிகாஃப்' இருந்த போது, அங்கிருந்தவாறே (அருகிலிருக்கும் அறையிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

உம்முல் முஃமினீன்ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்களுடன் தனது; அந்தரங்க நிலைகள் குறித்த சில விடயங்களை இங்கு குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் அவர்கள் இருவரும் பெருந்துடக்கின் போது ஒன்றாக ஒரே பாத்திரத்திலிருந்து நீர் அள்ளிக் குளித்திருக்கிறார்கள். அத்துடன் மாதவிடாயின் போது சுகம் அனுபவிக்க நாடினால் உடலில் தொப்புல் முதல் முழங்கால் வரை தனது உடலை மறைத்துக்கொள்ளுமாறு பணித்துவிட்டு உடலுறவை தவிர்;த்து அவர்களை அணைத்துக்கொள்வார்கள். நபி ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுன் நபவியில் இஃதிகாப் இருக்கும் போது -ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் மாதவிடாய்ஏற்பட்டிருக்கும் நிலையில் - நபியவர்கள் தனது தலையை நீட்ட அவர்களுடைய தலையை கழுவிவிடுவார்கள்.

فوائد الحديث

ஒரே பாத்திரத்தில் கணவனும் மனைவியும் குளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும்.

பெண்குறியைத் தவிர்த்து மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணை கட்டி அணைத்து சுகம் அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டதாகும் ஏனெனில் அவளின் உடல் தூய்மையானதாகும்.

கட்டிஅணைக்கும் நேரத்தில் பெண் துணியொன்றை அவளது மறையுறுப்பு பகுதியில் கட்டிக் கொள்வது விரும்பத்தக்கது.

தடைசெய்யப்பட்ட விடயமொன்றில் வீழ்வதை தவிர்க்கும்; வழிமுறைகளை கைக்கொள்வது இந்த ஹதீஸில் சுற்றிக்காட்டப்பட்டுள்ளமை.

மாதவிடாய் ஏற்பட்ட ஒரு பெண் பள்ளியினுள் தரித்திருப்பது தடுக்கப்பட்டிருத்தல்.

ஈரமான அல்லது உலர்ந்த பொருட்களைத் தொடுவது மாதவிடாய் பெண்ணுக்கு அனுமதிக்கப்படுகிறது,இதில் தலைமுடியைக் கழுவுதல் மற்றும் தலையை வாரிவிடுவதல் ஆகியவை அடங்கும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் குடும்பத்தாரிடம் அழகிய முறையில் நடந்து கொண்டமை.

التصنيفات

திருமணம் குடும்ப வாழ்வு என்பவற்றில் நபியவர்களின் வழிகாட்டல்