"உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்;…

"உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக உம்மு ஸலமா (ரலி) கூறுகின்றார்கள் : "உங்களுக்குச் சில ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்களிடம் நீங்கள் நன்மையையும் காண்பீர்கள்; தீமையையும் காண்பீர்கள். தீமையை (மனதால்) வெறுத்தவர் பிழைத்தார்; மறுத்தவர் தப்பித்தார். (இதற்கு மாறாக,) யார் (தீமையைக் கண்டு) திருப்தி அடைந்து (அதற்குத்) துணை போனாரோ (அவருக்குக் குற்றத்தில் பங்கு உண்டு)" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் நாங்கள் போரிடலாமா?" என்று கேட்டார்கள். "இல்லை. அவர்கள் தொழுகையை நிறைவேற்றும் வரை (வேண்டாம்)" என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

ஆட்சித் தலைவர்களினால் சில பிரதிநிதிகள் எமக்கு நியமிக்கப்படுவார்கள், அவர்களிடம் மார்க்கத்திற்கு உடன்பட்ட சில நன்மைகளையும் காண்போம், முரண்பட்ட சில பாவங்களையும் காண்போம், அவர்களது அடக்குமுறையை அஞ்சி அதனைத் தடுக்க சக்தியற்று, உள்ளத்தால் வெறுத்தவர் பாவத்திலிருந்து தப்பிக் கொண்டவராவார், கையினாலோ, நாவினாலோ தடுக்க சக்தி பெற்று, தடுத்தவரும் தப்பிவிட்டார், இருப்பினும் அவர்களது செயலைப் பார்த்து திருப்தியடைந்து, துணை போனவர்கள் அவர்களைப் போன்றே அழிந்து போவார்கள் என நபியவர்கள் அறிவிக்கின்றார்கள். பின் தோழர்கள் அவர்களை எதிர்த்து நாம் போராடவா என நபியவர்களிடம் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் அவர்கள் தொழுகையை நிலைநாட்டும் வரை போர் தொடுக்க வேண்டாமெனத் தடுத்தார்கள்.

فوائد الحديث

எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னறிவுப்புச் செய்வது நபி (ஸல்) அவர்களது அற்புதங்களில் ஒன்றாகும்.

சக்திக்கேற்றவாறு பாவங்களைத் தடுப்பது அவசியமாகும், தொழுகையை நிலைநாட்டுவதை விட்டாலே தவிர ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சி செய்ய முடியாது போன்றவற்றுக்கு இந்நபிமொழி ஆதாரமாகவுள்ளது. ஏனெனில் தொழுகைதான் இஸ்லாத்தையும் நிராகரிப்பையும் வேறுபிரிக்கக் கூடியதாகும்.

பாவங்களைத் தடுப்பதிலும்,ஆட்சியாளர்களைப் பதவிநீக்கம் செய்வதிலும் அளவுகோள் மார்க்கமேதவிர மனோ இச்சையோ,பாவமோ,இனவெறியோ அல்ல

அநியாயக்காரர்களுடன் அநியாயத்தில் பங்கெடுப்பது, அதற்காகத் துணை போவது, அவர்களைக் காணும் போது மகிழ்வுறுவது, மார்க்க சட்டபூர்வமான தேவையின்றி அவர்களிடம் சென்று உட்கார்வது போன்றன கூடாது.

பிரதிநிதிகள் மார்க்கத்திற்கு முரணான செயலை உருவாக்கினால் பிரஜைகள் அதில் உடன்படுவது கூடாது.

குழப்பங்களைத் தூண்டுவது, ஒற்றுமையைக் குழைப்பதை விட்டும் எச்சரிப்பதுடன், அதனைப் பாவிகளான தலைவர்களது தீமைகளை சகித்துக் கொண்டு, அவர்களது துன்புறுத்தல்களைப் பார்த்து பொறுமை காப்பதை விடக் கடுமையானதாக மார்க்கம் கணிக்கின்றது.

தொழுகைதான் இஸ்லாத்தின் அடையாளமாகும், இஸ்லாத்தையும் நிராகரிப்பையும் வேறுபிரிக்கக் கூடியதாகவும் உள்ளது.

தொழுகையை விடுவது இறைநிராகரிப்பாகும் என்பதற்கு இந்நபிமொழி சான்றாக உள்ளது. ஏனெனில் அல்லாஹ்விடமிருந்து நிராகரிப்பு என்பதற்குத் தெளிவான சான்று எம்மிடமுள்ள ஒரு நிராகரிப்புச் செயலைக் கண்டாலே தவிர ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராட முடியாது, தொழுகையை நிலைநாட்டாவிட்டால் அவர்களுடன் போரிடலாம் என நபியவர்கள் எமக்கு அனுமதித்திருப்பதானது தொழுகையை விடுவது அல்லாஹ்விடமிருந்து எம்மிடம் ஆதாரமுள்ள தெளிவான நிராகரிப்பாகும் என்பதற்கு சான்றாகவுள்ளது.

التصنيفات

நாட்டுத் தலைவருக்கெதிரான கிளர்ச்சி