அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்)

அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்)

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவனை சோதிப்பான். (அவருக்கு ஒரு துன்பத்தை ஏற்படுத்துவான்).

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏதேனும் நலனைத் தர நாடினால் அவர்களின் பாவ காரியங்களின் குற்றப் பரிகாரத்துக்கும், அவர்களின் அந்தஸ்த்தின் உயர்வுக்கும் காரணமாக அமைவதற்கு அவர்களின் உயிர், செல்வம், பிள்ளைகள் விடயத்தில் அவர்களைச் சோதிப்பான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் தெரிவிக்கிறார்கள்.

فوائد الحديث

முஃமின் பல்வேறுவகையான சோதனைகளுக்கு உட்படுகிறான்.

சில வேளை அடியானின் அந்தஸ்தை உயர்த்தி, தரத்தை மேலோங்கச் செய்யவும் அவனின் தவறுகள் மன்னிக்கப்படவும் அடியானை சோதிப்பதானது, அல்லாஹ் தனது அடியானுடனான நேசத்திற்கான அடையாளமாகவும் இருக்க முடியும்.

சோதனைகளின் போது பொறுமைகாத்து பதட்டமின்றி இருக்க ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

التصنيفات

விதியின் விடயங்கள்