நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது…

நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், அதைக் கணக்கிட்டுக் (30 ஆக பூரணப்படுத்திக்) கொள்ளுங்கள்

நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : நீங்கள் அதை (பிறையைக்) கண்டால் நோன்பு பிடியுங்கள். அதைக் கண்டால் நோன்பு விடுங்கள். உங்களுக்கு அது மறைக்கப்பட்டால், அதைக் கணக்கிட்டுக் (30 ஆக பூரணப்படுத்திக்) கொள்ளுங்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இங்கு நபியவர்கள் ரமழான் மாதம் ஆரம்பிப்பது மற்றும் நிறைவடைவதன் அடையாளங்களை விளக்கும் வகையில் இவ்வாறு கூறுகின்றார்கள் : நீங்கள் ரமழானின் தலைப்பிறையைக் கண்டால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள். ஷவ்வால் மாதத் தலைபிறையைக் கண்டால், நோன்பை விட்டுப் பெருநாள் எடுங்கள். அதற்கும் உங்களுக்கும் மத்தியில் மேகம் மறைத்து, உங்களால் அதைக் காணமுடியாவிட்டால், ஷவ்வால் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்துகொள்ளுங்கள்.

فوائد الحديث

மாதம் நுழைவதை உறுதிப்படுத்துவதில், கண்ணால், பார்ப்பதைத் தான் கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, கணிப்பீட்டை அல்ல.

மாதம் நுழைவதைப் பிறைப் பார்த்தல் இன்றி கணிப்பீட்டால் மாத்திரம் தீர்மானிக்கப்படும் போது, நோன்பு நோற்பது கட்டாயமில்லை என்பதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளனர் என்று இப்னுல் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைப்பிறையைக் காண்பதற்கு, மேகம் போன்ற ஏதாவதொன்று தடையாக இருந்தால், ஷஃபான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்வது கட்டாயமாகும்.

சந்திர மாதம் என்பது இருபத்தியொன்பது அல்லது முப்பது நாட்கள் மாத்திரமே.

ஷவ்வால் தலைப்பிறையைக் காண்பதற்கு, மேகம் போன்ற ஏதாவதொன்று தடையாக இருந்தால், ரமழான் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்திசெய்வது கட்டாயமாகும்.

யாராவது, முஸ்லிம்களது நோன்பு விவகாரத்தில் கவனம் செலுத்தும் யாரும் இல்லாத இடத்தில் அல்லது அதை அலட்சியப்படுத்துபவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தால், அவர் அவ்விடயம் தொடர்பாகக் கவனம் செலுத்தி, நேரடியாகப் பிறையைப் பார்த்த ஒருவரிடம், அல்லது தனக்கு நம்பிக்கையான ஒருவர் பார்த்ததை ஏற்றுள்ள ஒருவரிடம் சென்று விசாரிக்கவேண்டும். அதன் பின்னர் தான் நோன்பை ஆரம்பிக்கவும், முடிக்கவும் வேண்டும்.

التصنيفات

பிறை பார்த்தல்