'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத்…

'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள்'

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் கூறியதை தான் கேட்டதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன், தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்' எனக் கேட்கப் பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை அது தடை செய்யப்பட்டதாகும்' எனக் கூறினார்கள். பின்னர் நபியவர்கள்', யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை உண்டனர் என்று கூறினார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

மக்கா வெற்றிகொண்ட வருடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுவதை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அவர்கள் கேட்டார்கள். நபியவர்கள் கூறினார்கள் 'நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், தானாக செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளார்கள் அப்போது : ஸஹாபாக்கள் அல்லாஹ்வின் தூதரே !இறந்த விலங்குகளின் கொழுப்பை விற்பது அனுமதிக்கப்பட்டதா? ஏனெனில் அதன்மூலம் கப்பல்களுக்கு முலாம் பூசப்படுகிறது, தோல்களுக்கு மெருகேற்றப் படுகிறது. மக்கள் அதன்மூலம் விளக்கேற்று கிறார்கள். அதற்கு நபியவர்கள் 'இல்லை' அதனை விற்பது ஹராமாகும் என்றார்கள். அதனைத் தொடர்ந்து நபியவர்கள் ' யூதர்களை அழித்து நாசமாக்குவானாக! விலங்குகளின் கொழுப்பை ஹராமாக்கியபோது அதனை அவர்கள் உருக்கி பின் அதன் எண்ணையை விற்று அதன் கிரயத்தை உண்டனர்.' என்று கூறினார்கள்.

فوائد الحديث

'தானாக இறந்தவை, மதூபானம் பன்றி ஆகியவை விற்பது ஹராம் என்பதில் முஸ்லிம் அனைவரும் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என இமாம் நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.'

' ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள கொழுப்பை போன்று எவை சாப்பிடுவதும், பயன்பெருவதும் அனுமதிக்கப்படவில்லையோ அவற்றை விற்பதும் அதன் கிரயத்தை சாப்பிடுவதும் அனுமிக்கப் படவில்லை' என்ற விடயத்தை இந்த ஹதீஸ் உள்ளடக்கியுள்ளதாக இமாம் அல்காழி அவர்கள் குறிப்பிடுகிறார்.

'அது ஹராமாகும்' என்ற நபியவர்களின் கூற்றிற்கு அதிகமான அறிஞர்கள் 'அதனை விற்பது ஹராம் அதன் மூலம் பயன்பெருவது ஹராமாகாது' என்ற வியாக்கியனம் பலமானது என்பதை அதன் வசன நடை உணர்த்துகிறது என இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஹராமாக்கப்பட்ட ஒன்றை ஹலாலாக்குவதற்காக மேற்கொள்ளும் அனைத்து சூழ்ச்சிகளும்- தந்திரங்களும்-செல்லுபடியற்றவை.

தானாக இறந்தவற்றை விற்பது ஹராமாகும்; என்ற பொதுத்தடையில் ஒரு காபிரின் பிரேதத்தை விற்பதும் ஹராமாகும் என்பது உள்ளடங்கியுள்ளாதாக அறிஞர்ககள் குறிப்பிடுவதாக இமாம் நவவி அவர்கள் கூறுகிறார்கள். அதாவது ஒரு காபிரை கொலைசெய்து, ஏனைய காபிர்கள் அப்பிரதேத்தை விலைக்கு வாங்க கோரினால், அல்லது அதற்கு பகராமாக இழப்பீடு ஒன்றைத் தந்து பிரேதத்தைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் அதனை விற்பது ஹராமாகும். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸ் உள்ளது : அகழிப்போரின் போது முஸ்லிம்கள் நவ்பல் இப்னு அப்துல்லாஹ் அல்மஹ்ஸுமி என்பவரை கொலைசெய்தார்கள். அவருடைய பிரேதத்திற்காக காபிர்கள் நபியவர்களுக்கு பத்தாயிரம் திர்ஹம்களை கொடுத்தார்க்ள அதனை நபியவர்கள் எடுக்காது அவர்களுக்கு பிரதேத்தை ஒப்படைத்தார்கள்.

التصنيفات

அனுமதிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட மிருகங்களும் பறவைகளும்