' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால்,…

' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : ' (பிரதிவாதியை விசாரிக்காமல் ) மக்களின் வாதத்திறமையின் அடிப்படையில் அவர்கள் கோருவதெல்லாம் வழங்கப்பட்டால், மக்களில் பலர்; ஏனைய மனிதர்களின் உயிர்க்ளுக்கும் உடமைகளுக்கு உரிமை கோரத் தொடங்குவார்கள். எனவே உரிமை கொண்டாடும் வாதி அதற்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும், அதனை மறுப்பவர் -பிரதிவாதி- சத்தியம் செய்ய வேண்டும்.'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை அல்பைஹகீ அறிவத்திருக்காறார்]

الشرح

எவ்வித ஆதாரமோ, தகுந்த சாட்சியங்களோ இல்லாது தங்களது வாதத்தின் அடிப்படையில் வழக்காடும் ஒருவருக்கு அவரால் கோரப்படுபவை வழங்கப்படும் என்றிருந்தால் சிலர் மக்களின் உடமைகளையும், அவர்களின் உயிரையும் கூட உரிமை கோரத் தொடங்குவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். ஆகவே, வாதி தனது கூற்றுக்கான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். அவரிடம் ஆதாரம் இல்லையென்றால், அந்தக் கோரிக்கை பிரதிவாதியின் முன் வைக்கப்படும். அவர் மறுத்தால், அவர் சத்தியம் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு அவர் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.

فوائد الحديث

இப்னு தகீக் அல்-ஈத் கூறுகிறார் : சர்ச்சை மற்றும் மோதலின் போது பின்பற்ற வேண்டிய மிகப்பெறும் அடிப்படையொன்றையும் சட்டத் தீர்புகளின் அடிப்படை பற்றி பேசக்கூடியதுமான ஒரு பிரதான ஹதீஸாகும்.

மோசடி செய்தல் மற்றும் சூழ்சி செய்தல் ஆகியவற்றிலிருந்து மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கவே இஸ்லாமிய ஷரீஆ வந்துள்ளது.

நீதிபதி தனது அறிவின் படி தீர்ப்பளிக்காமல் ஆதாரங்களை அவதானிப்பதன் மூலமே தீர்ப்பளிக்க வேண்டும்

உரிமைகள் மற்றும் வியாபார பரிவர்த்தனைகள் தொடர்பானதாக இருந்தாலும் சரி அல்லது ஈமான் மற்றும் அறிவு தொடர்பானதாக இருந்தாலும் சரி ஆதாரம் இல்லாமல் யாராவது உரிமை கோரினால் அது நிராகரிக்கப்படும்

التصنيفات

வாதங்களும் ஆதாரங்களும்