إعدادات العرض
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது…
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்'
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் என்னிடம் : , ''நீர் காலமெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் வழிபடுகிறீரா?' என்று கேட்டார்கள். நான் ''ஆம்' என்றேன். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறு நீர் செய்தால், அதன் காரணமாக கண்கள் உள்ளே சொருகிவிடும் உடல் நலிந்துவிடும். காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்றவராக மாட்டார். (மாதம் தோறும்) மூன்று நாட்கள் நோன்பு நோற்பது காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்' என்றார்கள். அதற்கு ''நான் இதைவிட அதிகமாக (நோற்பதற்கு) சக்தி உள்ளவன்' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''அப்படியானால் நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்பு நோற்பார்கள்; (எதிரிகளைச்) சந்திக்கும்போது பின்வாங்கவுமாட்டார்கள்' என்று கூறினார்கள்.
الترجمة
العربية Bosanski English Español فارسی Indonesia Русский Türkçe اردو 中文 हिन्दी ئۇيغۇرچە Hausa Kurdî Português සිංහල Kiswahili অসমীয়া Tiếng Việt ગુજરાતી Nederlands മലയാളം Română Magyar ქართული Moore ไทย Македонски తెలుగు मराठी ਪੰਜਾਬੀ دری አማርኛ বাংলা Malagasy Українська Tagalog ភាសាខ្មែរ ಕನ್ನಡ پښتو Svenska Wolof नेपाली Shqip Српски မြန်မာالشرح
நபி ﷺ அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் முழு வருடமும் தொடராக நோன்பு நோற்று, இரவு முழுவதும் தூங்காமல் தொழுவதாக செய்தி எட்டியது. அதனால் நபி ﷺ அவர்கள் அவரை அதிலிருந்து தடுத்தார்கள்; மேலும் அவரிடம்: '(சில நாட்கள்), நோன்பு நோற்றுக்கொள்வீராக மற்றும் சில நாட்கள் நோன்பு நோற்காதிருப்பீராக. இரவில் தொழவும், தூங்கவும் செய்வீராக' என்று கூறினார்கள். இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப்படுத்தவில்லை. இடைவிடாது நோன்பு நோற்பதையும், இரவு முழுவதும் தொழுவதையும் அவர் தடை செய்தார்கள். மேலும் கூறினார்கள்: 'நீ இதைச் செய்தால், உன் கண்கள் பலவீனமடைந்து உள்ளே சென்று விடும்; உன் உடலும் சோர்வடைந்து, உன் உயிர்சக்தி குன்றி, நீ களைப்புற்று சோர்ந்து போவாய். ஆகவே, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றவன் உண்மையில் நோன்பு நோற்றவனாக இல்லை'. ஏனெனில், தடை செய்யப்பட்ட முறையை மீறியதாலும் நோன்பை விடாது நோற்றதினாலும் அவனுக்கு நோன்பின் கூலி கிடைக்கவில்லை. பின்னர் நபி ﷺ அவர்கள் அவரை வழிப்படுத்தி, 'ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது, ஆண்டு முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்' என்று கூறினார்கள். ஏனெனில், ஒவ்வொரு நற்காரியத்திற்கும் பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. இது நன்மையின் பெருக்கத்தின் குறைந்த அளவாகும். அதற்கு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்: 'நான் அதைவிட அதிகமாகச் செய்யும் திறன் கொண்டவன்' என்று கூறினார். அப்போது நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 'அப்படியானால், தாவூத் (அலை) அவர்களின் நோன்பு முறையைப் பின்பற்றுவீராக. அது நோன்புகளில் சிறந்தது. அவர் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விடுவார். மேலும், எதிரியைச் சந்தித்தபோது அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை'. ஏனெனில், அவருடைய நோன்பு முறை அவரது உடலை பலவீனப் படுத்தவில்லை.فوائد الحديث
“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு இருப்பது, முழு ஆண்டும் நோன்பு இருந்ததற்கு சமம். ஏனெனில் ஒரு நற்செயலுக்கு பத்து மடங்கு நன்மை வழங்கப்படுகிறது. ஆகவே (3 × 10 = 30) முப்பது நாட்களாகும். எனவே, ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு இருப்பவர், முழு ஆண்டும் நோன்பு இருந்ததுபோல் ஆகிறார்”.
அல்லாஹ்வின் பால் அழைப்பு மற்றும் பிரச்சாரம் செய்வதற்கான முறைகளில் ஒன்று, நல்ல செயல்களைச் செய்ய ஊக்குவிப்பதும், அவற்றின் வெகுமதிகளையும்; தொடர்ந்து செய்வதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களையும் எடுத்துரைப்பதுமாகும்.
இமாம் அல்-கத்தாபி (ரஹ்) கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் இப்னு; அம்ர் (ரழி ) அவர்களின் சம்பவத்தின் சாரம் என்னவெனில், அல்லாஹ் தன் அடியானை நோன்பு என்ற வணக்கத்தில் மாத்திரம் கட்டுப்படுத்தி வணக்கம் செய்யுமாறு ஆணையிட வில்லை. மாறாக, பல்வேறு வகையான இபாதத்துகளால் அவனை வணங்குமாறு கட்டளையிட்டான். ஒருவர் தன் முழு சக்தியையும் ஒரே வழிபாட்டில் செலுத்தினால், மற்ற வழிபாடுகளில் குறைபாடு ஏற்படும். ஆகவே, அளவோடு நடந்து, மற்ற வழிபாடுகளுக்காக சிறிது சக்தியைச் சேமித்து வைப்பதே சிறந்தது. இதை நபி ﷺ அவர்கள் தாவூத் (அலை) அவர்களைப் பற்றி கூறிய விடயத்தில் 'அவர் எதிரியைச் சந்தித்தால் பின்வாங்குவதில்லை' என்ற சொல்லின் மூலம் சுட்டிக்காட்டினார்கள்; ஏனெனில், அவர் ஜிஹாதிற்காக சக்தியைப் பெறுவதற்கு நோன்பை விடுபவராக இருந்தார்.
வழிபாடுகளில் அளவுக்கு மீறி ஆழ்ந்து போவதையும், வலிந்து கடினப்படுத்திக் கொள்வதையும் இந்த ஹதீஸ் தடை செய்துள்ளமை. நன்மை என்பது ஸுன்னாவைப் பின்பற்றுவதில்தான் உள்ளது.
அறிஞர்களின் பெரும்பான்மையினோரின் ; கருத்துப்படி, இடைவிடாது (எப்போதும்) நோன்பு நோற்பது விரும்பத்தகாததாகும். ஒருவர் தன்னை அவரது சக்திக்கு மேல் கடினப்படுத்தி, தன்னையே பாதிக்குமாறு செய்து, நபி ﷺ அவர்களின் ஸுன்னாவை புறக்கணித்து, தனது வழிமுறை (போக்கு) ஸுன்னாவைவிட சிறந்தது என்று நம்பினால், அது ஹராமாகும்.
التصنيفات
உபரியான நோன்பு