,நான் மறுமை நாளில்

,நான் மறுமை நாளில்

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளார்கள்;: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது சிறிய தந்தையிடம்; 'அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்று கூறுங்கள்,நான் மறுமை நாளில் உங்களுக்கு சான்று பகர்கின்றவனாக இருப்பேன். அதற்கு அவர் ' மரண பயம் இஸ்லாத்தை ஏற்பதற்கு தூண்டியது என குரைஷிகள் என்னைக் குறைகூறும் நிலை இல்லாதிருந்தால்; நான் நிச்சயமாக உம்மை மகிழ்வித்திருப்பேன் என்று கூறினார்.அல்லாஹ்; பின்வரும் வசனத்தை இறக்கியருளினான் : '(நபியே) நீ விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது எனினும்; அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். (ஸுறத்துல் கஸஸ்: 56) என்ற வசனத்தை இறக்கியருளினான்

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தனது சிறிய தந்தை மரணத் தருவாயில் இருக்கும் நிலையில் அவரிடம், கலிமாவை மொழியுமாறு வேண்டிக்கொண்டார்,அவ்வாறு செய்தால் அவருக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்வதோடு அவர் முஸ்லிம் என சாட்சி கூறுவதாகவும் குறிப்பிட்டார்கள். மரண பயம் மற்றும் இயலாமை காரணமாக அவர் இஸ்லாத்தை தழுவினார் என குறைஷியர் கண்டித்துவிடுவர் என்ற பயத்தினால் அவர் ஷஹாதா கலிமாவை மொழிய மறுத்துவிட்டார். மேற்குறிப்பிட்ட விடயம் மாத்திரம் இல்லாதுவி;;ட்டால் ஷஹாதாக் கலிமாவைக் கூறி நபியின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதுடன்; நபியின் எதிர்பார்ப்பை அவர் விரும்பியது போல் தான் நிறைவேற்றியிருப்பார் என்று கூறினார்.உடனே அல்லாஹ் தனது நபிக்கு 'இஸ்லாத்தை ஏற்கச்செய்வதற்கான வாய்ப்பை உம்மால் வழங்க முடியாது அல்லாஹ்வே நேர்வழியை ஏற்று நடப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகிறான்.' என்ற கருத்தை பிரதிபளிக்கும் அல்குர்ஆன் வசனத்தை இறக்கினான். இந்த அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப்பொருத்தவரை மக்களுக்கு நேர்வழியை தெளிவுபடுத்தி அதன் பால் அழைப்புவிடுப்பது தவிர வேறு பொறுப்பு கிடையாது.

فوائد الحديث

மனிதர்களின் பேச்சுக்கு பயந்து சத்தியத்தை கைவிடல் ஆகாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் நேர்வழியின் பால் வழிகாட்டுதல் அறிவுறுத்துதல் ஆகிய விவகாரங்களில் அதிகாரத்தைப்பெற்றுள்ளாரே தவிர அதனை ஏற்கச் செய்வதற்கான அதிகாரத்தை பெறவில்லை

இஸ்லாத்தின் பால் அழைப்பதற்காக -காபிரான –முஸ்லிமல்லாத நோயாளியை சந்திக்கசெல்வது அனுமதிக்கப்பட்டதாகும்.

எல்லா நிலைகளிலும் -அழைப்புப்பணியில் - பிரச்சாரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காட்டிய அதீத ஈடுபாட்டை இந்த ஹதீஸ் பிரதிபளிக்கிறது.

التصنيفات

கழா, கத்ர் மீது விசுவாசம் கொள்ளுதல், இஸ்லாம், ஏகத்துவத்தின் மகிமைகள்