அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை…

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள்

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தம்தோல்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக 'தக்பீர்' கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோல்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து எழும்போது) 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதோ சஜ்தாவிலிருந்து எழும்போதோ) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுகையின் போது மூன்று நிலைகளில் தோல்பட்டைக்கு நேராக தனது இரு கைகளையும் உயர்த்தக்கூடியவர்களாக இருந்தார்கள். அதாவது:தோள்பட்டை என்பது மூட்டுக்கும் கைக்கும் இடைப்பட்ட பகுதி. முதலாவது இடம் : தொழுகையின் ஆரம்பத் தக்பீரான இஹ்ராம் தக்பீர் கூறுகையில். இரண்டாவது இடம் : ருகூஉ செய்ய தக்பிர் கூறும் போது , மூன்றாவது : ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, 'ஸமிஅல்லாஹுலிமன்ஹமிதஹ் ரப்பனா வலகல் ஹம்த்' என்று கூறும் போது. பொருள் : தன்னைப் புகழ்ந்தவனின் புகழுரையை அல்லாஹ் செவிமடுத்தான். எங்கள் இரட்சகனே புகழனைத்தும் உனக்கே உரியது. ஸஜ்தாவைத் தொடங்கும்போதோ அல்லது அதிலிருந்து எழும்போதோ நபியவர்கள் கைகளை உயர்த்தமாட்டார்கள்.

فوائد الحديث

தொழுகையில் கைகளை உயர்த்துவதன் யதார்த்தம் என்னவென்றால், அது உண்மையில் தொழுகைக்கு அலங்காரமாகவும், தூயவனான அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்துவதாகவும் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் கைகளை உயர்த்திய இடங்களில் நான்காவது இடமும்; குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அபு ஹுமைத்; அஸ்ஸாஇதி அவர்கள் அறவித்துள்ளார்கள், இந்த ஹதீஸை அபூ தாவூத் உட்பட மற்றும் பலர் பதிவு செய்துள்ளனர். அதாவது மூன்று ரக்அத் மற்றும் நான்கு ரக்அத் தொழுகைகளில் முதல் தஷஹ்ஹுத் ஓதிய பின் நிலைக்கு வரும்போதாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இரண்டு கைகளையும் இரு காதுகளுக்கும் படாது நேராக உயர்த்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புஹாரி மற்றும் முஸ்லிமில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில் மாலிக் இப்னு ஹுவைரிஸ் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர்கள் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தக்பீர் கூறும் போது தம் கைகளை காதுகளுக்கு இணையாக –நேராக உயர்த்தினார்கள் என இடம்பெற்றுள்ளது.

'ஸமிஅல்லாஹு லிமான் ஹமிதா' என்று ஜமாஅத் தொழுகையின் போது இமாம் மட்டுமே கூறுவார். அதனைத் தொடர்ந்து மஃமூம்கள் 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறுவார்கள். தனித்துத் தொழுபவர் ஸமிஅல்லாஹுலிமன் ஹமிதஹ் என்றும் ரப்பனாவலகல் ஹம்து என்ற இரண்டையும் கூறவேண்டும்.

ருகூவிற்குப் பிறகு 'ரப்பனா வலகல் ஹம்து' என்று கூறும் நான்கு முறைகள் ஸஹீஹான ஹதிஸ்களில் இடம்பெற்றுள்ளது.அவைகளில் மேலே குறிப்பிடப்பட்டது ஒரு வடிவமாகும். இம்முறைகளில் ஒரு வடிவத்தை மாத்திரம் கூறாது ஏனையவைகளையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதுவது மிகவும் சிறந்தது.

التصنيفات

தொழும் முறை