'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு

'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு

அல்லாஹ்வின் துதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'உங்கள் ஒருவரின் பாத்திரத்தில் நாய் நீர் அருந்தினால் அதனை ஏழு தடவைகள் கழுவட்டும்'

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நாய் பாத்திரத்தில் வாய்விட்டால் அதனை ஏழு தடவைகள் கழுவுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கட்டளையிட்டார்கள். அதில் முதலாவது தடவை மண்ணால் தேய்த்து பின் நீரால் கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது நாயின் அசுத்தம் மற்றும் பாதிப்பிலிருந்து முற்றிலும் சுத்தமானதாக பாத்திரம் மாறிவிடும்.

فوائد الحديث

நாயின் உமிழ் நீர் கடுமையான நஜீஸாகும்.

நாய் பாத்திரத்தில் வாய்விடுவது அதனை அசுத்தப்படுத்துவதுடன் அதிலுள்ள நீரையும் அசுத்தப்படுத்திவிடும்.

மண் பயன்படுத்தியும்; ஏழு தடவைகள் கழுவுவது நாய் நக்கிய பாத்திரத்திற்கு மாத்திரமானதாகும். ஆனால் அதன் சிறுநீர் மலம் மற்றும் பிற வழிகளில் மாசுபடுத்தப்பட்டவை இவ்வொழுங்குக்குள் வரமாட்டாது.

பாத்திரத்தை மண்ணால் கழுவும் முறை என்னவென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மண்ணைக் கலந்து, அக்கலவையினால் பாத்திரத்தை கழுவுவதாகும்.

இந்த ஹதீஸில் குறிப்பிடப்பட்ட நேரடிச் சட்டமானது எல்லா நாய்களுக்கும் பொதுவானது . ஷரிஆவில் வளர்க்க அனுமதிக்கப்பட்ட நாய்கள் உட்பட. வேட்டையாடுவதற்கும், வீட்டைக் காப்பதற்கும், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கும் வளர்க்கப்படும் நாய்களும் இதில் அடங்கும்.

நாய் வாய்விட்ட பாத்திரங்களை கழுவுவதில் சவர்க்காரமோ அஷ்னன்(ஒரு வகையான மரம்) மண்ணிற்கு நிகராக அமையாது என்பதால் நபியவர்கள் மண்ணை இங்கு விசேடமாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆகவே அதனைப் பயன்படுத்துவதே சிறந்தது.

التصنيفات

அசுத்தம் அகற்றல், பாத்திரங்கள்