'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக…

'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்து விட்டால், அந்த வெறுப்பை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துகொள்வோம்'

அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: 'நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணைவிடவும் அதிக வெட்கமுடையவர்களாயிருந்தார்கள். தாம் விரும்பாத ஒன்றை அவர்கள் பார்த்து விட்டால், அந்த வெறுப்பை அவர்களின் முகத்திலிருந்தே நாங்கள் அறிந்துகொள்வோம்'.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

வீட்டில் தன்னை மறைத்துக்கொண்டு அடக்கமாக இருக்கும் திருமணம் முடிக்காத ஆண்களுடன் உறவு கொள்ளாத கண்ணிப்பெண்ணைவிடவும் மிகவும் நாணமிக்கவராக நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என்பதை அபூஸஈத் அல் குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். நபியவர்கள் ஏதாவதொன்றை வெறுத்தால் அவரின் முகம் உடனடியாக மாறிவிடும். அவர் யாருடனும் பேசமாட்டார் இம்முக மாற்றம் அவர்களின் நாணத்தின் உச்சநிலையை காட்டும். மாறாக நபியவர்களின் அதிருப்த்தியை அவர்களின் முகத்திலிருந்தே ஸஹாபாக்கள் புரிந்துகொள்வார்கள்.

فوائد الحديث

இந்த ஹதீஸ் நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் காணப்பட்ட கூச்ச உணர்வு -நாணம்- பற்றிய விடயத்தை உள்ளடக்கியுள்ளது. இது ஒரு மகத்தான பண்பாகும்.

அல்லாஹ்வின் மார்க்கத்தையும், அவனது புனிதத்தையும் யாரும் மீறாத வரை மட்டுமே அவர்களின் இந்த அடக்கம் இருந்தது. இந்த விடயங்கள் மீறப்பட்டால், அவர் கோபமடைந்து, அதற்கேற்ப தனது தோழர்களுக்கு அறிவுறுத்தல்களையும் தடைகளையும் பிறப்பிப்பார்.

இந்த ஹதீஸ் அடக்கத்தை,(வெட்கத்தை) கைக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. ஏனென்றால் அது மனதை நல்ல விடயங்களைச் செய்யவும் அசிங்கமான விடயங்களைத் தவிர்க்கவும் தூண்டுகிறது.

التصنيفات

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்வெட்கம்