அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு…

அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : அடியார்கள் காலையை அடையும் ஒவ்வொரு நாளிலும், இரு மலக்குகள் இறங்கி, ஒருவர் "யா அல்லாஹ்! தர்மம் கொடுப்பவருக்கு பதிலாக மேலும் கொடுப்பாயாக" என்றும், மற்றவர், "யா அல்லாஹ்! தர்மம் செய்யாமல் வைத்துக்கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக" எனவும் பிரார்த்திப்பார்கள்.

[சரியானது] [இதனை இமாம் புஹாரி, முஸ்லிம் ஆகிய இருவருமாக பதிவு செய்துள்ளனர்]

الشرح

சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும் இரு மலக்குகள் இறங்கி பிரார்த்திப்பார்கள் என நபியவர்கள் கூறுகின்றார்கள். ஒருவர் இவ்வாறு கூறுவார்: "யா அல்லாஹ்! வணக்கங்களுக்காகவும், குடும்பத்திற்காகவும், விருந்தாளிகளுக்காகவும், உபரியான நற்கருமங்களுக்காகவும் செலவழிப்பவர்களுக்கு அவற்றை விடச் சிறந்த ஒன்றைப் பதிலாக வழங்கி, அவருக்கு அபிவிருத்தியை ஏற்படுத்துவாயாக" மற்றவர் இவ்வாறு கூறுவார்: செலவழிக்காமல் வைத்துக் கொள்பவருக்கு அழிவைக் கொடுப்பாயாக! உரியவர்களுக்குக் கொடுக்காமல் தடுத்துக்கொண்ட அவரது சொத்தை அழித்துவிடுவாயாக!

فوائد الحديث

கொடுப்பவருக்கு, அதற்குப் பகரமாக அதைவிடச் சிறந்தவை கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திக்கலாம். அல்லாஹ் கடமையாக்கியவற்றில் செலவழிக்காமல் தடுத்துக்கொண்டு கஞ்சத்தனம் காட்டுபவரின் சொத்துக்கள் அழியவேண்டும் எனவும் பிரார்த்திக்கலாம்.

மலக்குகள் தர்மம் செய்யும் நல்ல விசுவாசிகளுக்கு நன்மையும், அபிவிருத்தியும் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்திப்பார்கள். அவர்களது துஆ ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது.

குடும்பத்திற்காக செலவழித்தல், உறவுகளை சேர்ந்து நடக்க செலவழித்தல், நல்ல வழிகளில் செலவழித்தல் போன்ற கடமையான, ஸுன்னாவான அம்சங்களில் செலவழிக்கத் தூண்டல்.

நல் வழிகளில் செலவழிப்பவரின் சிறப்பு; அதாவது, அதன் விளைவு, அல்லாஹ் அதற்குப் பதிலாக மேலும் கொடுப்பான் என்பதே! அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் எதையாவது செலவழித்தால் அதற்கு அவன் பகரம் தருவான். வாழ்வாதாரம் அளிப்பவர்களில் அவனே சிறந்தவன். (ஸபஉ : 39)

இந்த துஆ, கடமையான செலவினங்களை செய்யாமல் இருப்பவருக்கு எதிரானதாகும். ஸுன்னாவான செலவினங்கள் இதில் நுழையமாட்டாது. ஏனெனில், அவர் இந்த துஆவிற்குத் தகுதியானவர் அல்ல.

கஞ்சத்தனம் தடுக்கப்பட்டதாகும்.

التصنيفات

உபரியான தர்மம்