அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன்…

அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்.

நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) கூறுகின்றார்கள் : "அடியான் ஆரோக்கியமானவனாய், ஊரிலிருக்கும்போது செய்யும் நற்செயல்களுக்குக் கிடைப்பது போன்ற (அதே) நற்பலன் அவன் நோயுற்று விடும்போது அல்லது பயணத்தில் இருக்கும்போது (அவன் பாவம் எதுவும் செய்யாமலிருக்கும் வரை) அவனுக்கு எழுதப்படும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை புஹாரி பதிவு செய்திருக்கிறார்]

الشرح

ஆரோக்கியமாகவும், ஓய்வாகவும் இருக்கும் போது வழமையாகவே ஒருவர் ஒரு நற்செயலை செய்து வந்து, பின் நோய் ஏற்பட்டதால் அதனை செய்ய முடியாமல் போனால் ஆரோக்கியமாக இருக்கும் போது வழங்கப்பட்ட நன்மையே இப்போதும் அவருக்கு எழுதப்படுகின்றது. அதே போன்றுதான் பயணம், மாதவிடாய் போன்ற தடங்கள் குறுக்கிட்டாலும் நன்மை எழுதப்படுகின்றது.

فوائد الحديث

அல்லாஹ்வின் விசாலமான கருணையும், தனது அடியார்கள் மீது கொண்டுள்ள இரக்கமும் இங்கு வெளிப்படுகின்றது.

பயணம், நோய் போன்ற மார்க்க சலுகைகளின் காரணமாக யாருக்கு வழமையாக செய்து வரும் நற்செயல்களை செய்ய முடியாமல் போகின்றதோ அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் செய்வேன் எனும் எண்ணத்தில் இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமாக ஊரிலிருக்கும் போது செய்ததற்குரிய நன்மை எழுதப்படுகின்றது.

التصنيفات

இஸ்லாத்தின் சிறப்பும் சிறப்பம்சங்களும்