அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறுவதில் இலஞ்சம் கொடுப்பவனையும்,…

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறுவதில் இலஞ்சம் கொடுப்பவனையும், எடுப்பவனையும் சபித்தார்கள்

அபூ ஹூறைரா ரழியல்லாஹூஅன்ஹூ அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தீர்ப்புக்கூறுவதில் இலஞ்சம் கொடுப்பவனையும், எடுப்பவனையும் சபித்தார்கள்.

[ஸஹீஹானது-சரியானது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இலஞ்சம் கொடுப்பவன் அதனை எடுப்பவன் ஆகியோர் இறையருளைவிட்டும் தூரப்படுத்தப்பட வேண்டும் என பிரார்த்தனை புரிந்தார்கள். இலஞ்சம் வழங்குபவன் தனது நோக்கத்தை பிழையான வழியில் அடைந்து கொள்வதற்கென தீர்ப்பில் தனக்கு சாதகமானதாக அமைய நீதிபதிகளுக்கு வழங்கும் கையூட்டல் இதில் உள்ள ஒன்றாகும்.

فوائد الحديث

இலஞ்சத்தில் தவறுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நிலை உள்ளதால் அதனைக் கொடுத்தல், எடுத்தல், அதற்காக மத்தியஸ்தம் வகித்தல், துணைபோதல் அனைத்தும் ஹராமாகும்.

இலஞ்சம் பெரும்பாவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நபியவர்கள் அதனை எடுப்பவர், கொடுப்பவர் இருவரையும் சபித்துள்ளார்கள்.

அநியாயம் இழைத்தல், அல்லாஹ் இறக்காததை வைத்துத் தீர்ப்பு வழங்கல், போன்றன நீதித்துறையில் இலஞ்சப் பரிவர்த்தணையின் போது ஏற்படுவதால் அது பாரிய குற்றமாகவும், கடுமையான பாவமாகவும் உள்ளது.

التصنيفات

நீதிபதிக்கான ஒழுங்குவிதிகள்