உங்களில் எவரேனும் தீமை ஒன்றைக் கண்டால் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும்.

உங்களில் எவரேனும் தீமை ஒன்றைக் கண்டால் அதனை தன் கரத்தால் தடுக்கட்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) கூறினார்கள் : "உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரங்களால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான நிலையாகும்".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸஈத் அல்குத்ரீ (ரலி) கூறினார்கள் : "உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ" இது ஆண் பெண், சிறுவர் பெரியோர் , மற்றும் உங்களில் எவர் எனும் வார்த்தையில் அடங்கும் அனைவருக்குமான பொதுவான வேண்டுதலாகும். தீங்கு என்பது அடிப்படையில் மோசமான செயலாகும். மார்க்கத் தடை, பகுத்தறிவால் புரிதல் ஆகிய இரு வழிகளில் தீங்கை அறிந்து கொள்ளலாம். இருப்பினும் மார்க்க சட்டத்தின் அடிப்படையில் அது பாவமாக எழுதப்படும். இதற்குப் புறம்பானதே நன்மையான காரியமாகும். இவ்விடயம் மனோஇச்சை, சுயவிருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது. தீமைகளைத் தடுப்பவரின் சக்தியை அடிப்படையாக வைத்து அதனை நபியவர்கள் மூன்று படித்தரங்களாக வகைப்படுத்தியுள்ளார்கள். கையினால் தடுப்பதை முதலில் கூறயுள்ளார்கள். இது அதிகாரமுள்ளவர்கள், மற்றும் நிதானமாகத் தடுக்கும் சக்தியுள்ளவர்களின் கடமையாகும். அத்தீமையைத் தடுக்கும் போது அதனை விடப் பாரிய தீமை உருவாகாமல் இருப்பதும் இங்கு கவனிக்க வேண்டும். தனது கையினால் தடுக்கும் சக்தியில்லையாயின் நாவினால் தடுக்க வேண்டும். இதன் போது பிரச்சினைகளைத் தூண்டாத வகையில் பொறுத்தமான முறையில், அதனை விடப் பாரிய தீமை உருவாகாமல் தடுக்க வேண்டும். அதற்கும் சக்தியில்லாவிடின் உள்ளத்தினால் வெறுத்து ஒதுங்கி விட வேண்டும். அதாவது நாவினால் தடுப்பதால் விபரீதங்கள் ஏதும் ஏற்படும் என அஞ்சினால் உள்ளத்தால் அதனை வெறுத்து, முடியுமாயிருந்தால் அவ்விடத்தை விட்டுச் சென்று விட வேண்டும். இதுதான் ஈமானின் மிக பலவீனமான நிலையாகும். ஏனெனில் குறைந்தபட்சமாக ஒரு மனிதனால் செய்ய முடியுமானதாகும்.

فوائد الحديث

பாவங்களைத் தடுக்கும் படித்தரங்களுக்கு இந்நபிமொழி ஆதாரமாக உள்ளது.

முடிந்தளவு தீமைகளைத் தடுப்பது கட்டாயமாகும்.

தீமைகளைத் தடுப்பதில் முழு முயற்சி செய்தல்.

நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது மார்க்கத்தின் மகத்தான ஒரு பகுதியாகும். இதன்மூலமே அது நிலைத்திருக்கின்றது.

தீமைகளைத் தடுப்பதில் மக்களின் ஆற்றலில் உள்ள வேறுபாடுகளை ஷரீஅத் கவனத்திற் கொண்டுள்ளது.

தீமைகளுக்குரிய தண்டனைகளை அறிவதில் அல்குர்ஆன், ஸுன்னாவின் பக்கமே மீள வேண்டும், மனோஇச்சையைப் பின்பற்றுவதன் மூலமல்ல.

தனது கட்டுப்பாட்டிலுள்ளவர், தனது பிரஜைகளுக்கு நல்ல வழிகாட்டல்களை வழங்க வேண்டும், அவர்களிடமிருந்து தீமைகள் வெளிப்பட்டால் அவற்றைத் தடுக்க வேண்டும்.

ஈமான் சொல், செயல், எண்ணம் என பல படித்தரங்களைக் கொண்டது, அது கூடவும், குறையவும் செய்யக்கூடிய பல தரங்களை உடையதாகும்.

التصنيفات

நம்பிக்கை அதிகரித்தலும் குறைதலும், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தலின் சட்டம்