நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் :…

நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி".

ஸவ்பான் (ரலி) கூறுகின்றார் : நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவார் : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி".

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

தொழுகை முடிந்ததும் "அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ், அஸ்தஃபிருல்லாஹ்" என்று மூன்று தடைவ சொல்லி விட்டு பின்வரும் துஆவை ஓதுவது ஸுன்னத்தாகும் என்பதை இந்நபிமொழி அறிவிக்கின்றது : "அல்லாஹும்ம அந்தஸ் ஸலாமு வமின்கஸ் ஸலாமு தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராமி". தொழுகைக்குப் பின் ஓதவேண்டிய இன்னும் பல துஆக்கள் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது.

فوائد الحديث

தொழுகை முடிந்தவுடன் தக்பீர் செல்ல வேண்டும் என்ற கூற்றுக்கு இதில் பதிலுண்டு.

ஸலாம் என்பது அல்லாஹ்வின் திருநாமமாகும், அனைத்துக் குறைகளை விட்டும் ஈடேற்றமானவன் எனும் பண்பும் அவனுக்குரியதாகும். ஈருலக கெடுதிகளிலிருந்து தனது அடியார்களுக்கு ஈடேற்றத்தை வழங்குபவன் அவனே.

التصنيفات

தொழுகையில் ஓத வேண்டிய திக்ருகள்