அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின்…

அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்

அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பின் வரும் விடயம் பற்றி வினவப்பட்டது ஒரு மனிதர் தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிகின்றார். இன்னொருவர் இனமாச்சரியத்திற்காக யுத்தம் புரிகின்றார். மற்றவர் முகஸ்துதிக்காக யுத்தம் புரிகின்றார். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யுத்தம் புரிபவர்களின் மாறுபட்ட நோக்கங்கள் பற்றி வினவப்பட்டது. அதாவது தான் ஒரு வீரன் என்பதற்காக யுத்தம் புரிபவர். இன்னொருவர் இனமாச்சிரியத்திற்காக யுத்தம் புரிபவர். மற்றவர் முகஸ்துதிக்காகவும் புகழுக்காகவும் யுத்தம் புரிபவர். இவர்களில் யார் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார்? அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: யார் அல்லாஹ்வின் வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போர் புரிகின்றாறோ அவர் அல்லாஹ்வின் பாதையில் உள்ளார் என்றார்கள்.

فوائد الحديث

அமல்களில் அங்கீகரிக்கப்பட்ட அமல்கள் அங்கீகரிக்கப்படாத அமல்கள் என்பதற்குரிய அடிப்படையாக நிய்யத்து எனும் நோக்கம் நாட்டம், மேலும் செய்யபடும் அமல் உளத்தூய்மையோடு அல்லாஹ்வுக்காக மாத்திரம் நிறைவேற்றப்படக் கூடியதாக அமைதல் வேண்டும் என்பதாகும்.

அறப்போரில் ஈடுபடும் ஒருவரின் 'நிய்யத' நோக்கம் அல்லாஹ்வின் வார்த்தை- தவ்ஹீத்- மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதாக இருந்து இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வேறொரு நோக்கமுமிருந்தால் உதாரணமாக 'கனீமத்' யுத்த வெற்றிற்குப்பின் எதிரிகள் விட்டுச் சென்ற பொருட்களை பங்கீடு செய்யப்படும் போது தாமும் அதிலிருந்து பங்கு பெறும் நோக்கோடு இருப்பின் அது அவரது அடிப்படை 'நிய்யத்'; நோக்கத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டாது.

தாய் நட்டையும், புனித தளங்களையும் எதிரிகளிலிருந்தும் பாதுகாப்பதற்காக போராடுவது அல்லாஹ்வின் பாதையில் அறப்போரில் -அல்லாஹ்வின் பாதையில் போராடுவதில் - உள்ளதாகும்.

அறப்போரில் கலந்து கொள்பவர்கள் பற்றி வந்திருக்கக்கூடிய சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின்வார்த்தை மேலோங்கி உயர் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றவர்களையே குறிக்கும்.

التصنيفات

போரின் ஒழுங்குகள்