'(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின்…

'(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅறிவித்துள்ளார்கள்: '(தொழுகையில்) உங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுங்கள்,ஏனெனில் அணியை சீர் செய்து கொள்வதிலேயே தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூட்டாகத் தொழக்கூடியவர்களுக்கு தங்களது அணிகளை சீர் செய்து கொள்ளுமாறு பணிப்பார்கள். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை முந்தி நிற்காது அணியைச் சீர் செய்து கொள்ளுமாறும் பணிப்பார்கள். மேலும்; அணியை சீர் செய்து கொள்வதில் தொழுகையின் பூரணத்துவம் தங்கியுள்ளது. அணி வளைந்து கோணலாக இருப்பது தொழுகையில் ஒரு வகை முறைகேட்டையும் குறையையும் ஏற்படுத்திவிடும். .

فوائد الحديث

தொழுகையை பூரணத்துவப்படுத்தும் விடயங்களில் கவனம் செலுத்துவதும் அதில் குறைகளை ஏற்படுத்தும் விடயங்களலிருந்து விலகி இருப்பதும் ஷரீஆ வலியுறுத்தும் விடயமாகும்.

கற்பித்தலில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்களிடம் காணப்பட்ட மதிநுட்பம், அதாவது மக்கள் கட்டுப்பட்டு நடப்பதை ஊக்குவிக்கவும் ஷரீஆ சட்டத்தில் உள்ள நுனுக்கத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும்; ஒரு சட்டத்தை அதன் காரணத்துடன் இணைத்துக் குறிப்பிடும் திறமையை பெற்றிருந்தமை.

التصنيفات

இமாம் மற்றும் மஃமூமின் சட்டங்கள், பள்ளிவாயிலின் சட்டங்கள்