'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது…

'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது அவர்களுக்கான வெகுமதியைக் குறைக்காது

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹூரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்: 'யாரொருவர் நேர்வழிக்கு அழைக்கிறாரோ அவரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதியைப் பெறுவார், ஆனால் இது அவர்களுக்கான வெகுமதியைக் குறைக்காது. மேலும்,வழிகேட்டை நோக்கி அழைப்பவருக்கு, அவரைப் பின்பற்றுபவர்களுக்குச் சமமான பாவம் இருக்கும். ஆனால் இது அவர்களின் பாவத்தைக் குறைக்காது.'

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் சத்தியமும் நன்மையும் நிறைந்த ஒரு வழிக்கு மக்களை வழிப்படுத்துகிறோரோ அவருக்கு அந்த நல்லவிடயத்தை பின்பற்றி நடப்போருக்கு கிடைக்கும் நன்மை-கூலி- கிடைக்கும். இதனால் அந்த நல்ல விடயத்தைப் பின்பற்றி நடப்பவரின் நன்மையில் எதுவும் குறைக்கப்படமாட்டாது என நபியவர்கள் கூறினார்கள். யார் ஒருவர் சொல் மற்றும் செயலின் மூலம் பாவமும் தவறும் அல்லாஹ் அனுமதிக்காத விடயங்கள் நிறைந்த அசத்திய வழியின் பால் அழைத்தால் அவரைப் பின்பற்றியவர்களுக்கு கிடைக்கும் பாவம் அவருக்கும் கிடைக்கும்.அதில் அவரைப்பின்பபற்றியவர்களின் பாவங்களில் ஏதும் குறைக்க்படமாட்டாது.

فوائد الحديث

சிறியளவிலோ அல்லது அதிகமாகவோ நேர்வழியின் பால் அழைப்பதின் சிறப்பு குறிப்பிடப்பட்டிருத்தல். நல்வழியின்பால் அழைக்கும் அழைப்பாளருக்கு அதனைப் பின்பற்றி செயற்படுபவருக்குக் கிடைக்கும் கூலி உண்டு. இது அல்லாஹ்வின் மிகப்பெரும் அருட்கொடையாகும்.

சிறியளவிலோ அல்லது அதிகமாகவோ வழிகேட்டின் பால் அழைப்பதன் ஆபத்து சுட்டிக்காட்டப்பட்டிருத்தல். அவ்வாறு வழிகாட்டுபவருக்கு குறித்த அந்த செயலை செய்பவருக்கு கிடைக்கும் பாவம் கிடைக்கும்.

செயலின் தன்மைக்கேட்பவே கூலி உண்டு. யார் நன்மையான விடயங்களின் பால் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அதனை செய்பவருக்குக் கிடைக்கும் கூலி உண்டு. யார் தீமையான விடயங்களின் பால் வழிகாட்டுகிறாரோ அவருக்கு அந்த தீமையை செய்பவருக்குரிய கூலி உண்டு.

ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் பகிரங்கமாக பாவங்கள் செய்வதை குறித்து எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகும். காரணம் அதனைப் பின்பற்றி யார் அப்பாவ காரியங்களில் ஈடுபடுகின்றாரோ அவர் அப்பாவத்தை தூண்டாதிருப்பினும் அதற்குரிய பாவம் அவருக்கு கிடைக்கும்.

التصنيفات

நூதன அனுஷ்டானங்கள்