இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற…

இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் : இறைநம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் லைலதுல் கத்ர் (கண்ணியமிக்க) இரவில் நின்று வங்கியவரின் முன்சென்ற (சிறு)பாவங்கள் மன்னிக்கப்படும்.

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

ரமழானில் இறுதிப்பத்தில் வரக்கூடிய லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குவதின் சிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிரஸ்தாபித்துள்ளார்கள். அவ்விரவில் தொழுகை பிரார்த்தனை அல்குர்ஆன் பாராயணம்,திக்ர் போன்ற விடயங்களில் யார் தன்னை ஈடுபடுத்தி,அவ்விரவையும் அது பற்றி இடம்பெற்றுள்ள சிறப்புகளையும் நம்பிக்கை கொண்டு, நற்கருமங்கள் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் நன்மையை எதிர்பார்த்து, முகஸ்துதியோ பிறருக்கு காட்டும் நோக்மோ இன்றி அவ்விரவில் நின்று வணங்கினால் அவரின்; முன் செய்த அனைத்து சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

فوائد الحديث

லைலதுல் கத்ர் இரவின் சிறப்பும், அதில் நின்று வணங்குவது பற்றிய ஊக்குவிப்பும் இந்நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

நற்காரியங்கள் உண்மையான -தூய்மையான எண்ணத்துடனேயே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அல்லாஹ்வின் கருணையையும் அருளையும் பிரதிபலிக்கின்றமை. அதாவது யார் லைலத்துல் கத்ர் இரவில் ஈமானுடனும் நன்மையை எதிர்பார்தும் இரவில் நின்று வணங்குகிறாரோ அவரின் முன் சென்ற சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

التصنيفات

இரவுத் தொழுகை, ரமழானின் இறுதிப் பத்து