'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'

'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மனைவியரில் சிலர் அறிவித்துள்ளார்கள் : 'குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை நம்புகிறவனின் நாற்பது நாட்களுடைய தொழுகைகள் ஏற்கப்பட மாட்டாது'.

[ஸஹீஹானது-சரியானது] [இதனை முஸ்லிம் பதிவு செய்துள்ளார்]

الشرح

குறி சொல்பவனிடம் செல்வதை விட்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.' அர்ராப் என்ற சொல்லானது ஜோசியக்காரன், நட்சத்திர குறிசொல்பவன், தடயங்கள்கண்டறிந்து குறிசொல்பவன் அதாவது சில முன்மாதிரி அம்சங்களைப் பயன்படுத்தி தனக்கு மறைவான விடயங்கள் பற்றிய அறிவுள்ளது எனக் கூறுவோர் யாவருக்கும் ஒரு பொதுவான சொல்லாகவே (அர்ராப் என்ற) இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.வெறுமனே குறிசொல்பவனிடம் செல்பவனிடம் மறைவான விடயம் சம்பந்தமாக கேட்டவனுக்கே நாற்பது நாட்கள் தொழுத தொழுகையின் நன்மைகளை அல்லாஹ் தடைசெய்துவிடுகிறான் என்றால் அவனின் பாவத்திற்கானதும் பெரும்பாவத்திற்கானதுமான தண்டனையாகும். இது இந்த செயலின் அபாயத்தை விளக்கப்போதுமான விடயமாகும்.

فوائد الحديث

ஜோசியமும், ஜோசியம் பார்ப்போரிடத்தில் சென்று மறைவான விடயங்கள் பற்றி விசாரிப்பதும் ஹராமாக்கப்பட்டிருத்தல்.

பாவச்செயலை செய்தமைக்கான தண்டனையாக சிலபோது மனிதன் செய்த நல்லமல்களுக்கான கூலி தடுக்கப்படலாம்.

இந்த ஹதீஸில் கையிலும் பீங்கானிலும் ஓதிப்பார்ப்பது, ஒரு விடயத்தை அறிந்து கொள்ள கிரகங்கள் பார்த்து ராசி பலன் பார்ப்பது போன்றனவும் உள்ளடங்குகின்றன. இவையனைத்தும் ஜோசியம் மற்றும் மறைவான விடயத்தை வாதிடுதலில் உள்ளடங்கும் செயல்களாகும்.

குறிசொல்பவனிடம் செல்பவனுக்கே இந்தத் தண்டனை என்றிருந்தால், குறி சொல்பவனுக்குரிய தண்டனை எப்படியிருக்கும்?

நாற்பது நாட்களுக்கான தொழுகைகள் செல்லுபடியாகும், அதனால் அதனை மீண்டும் தொழ வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அதற்கு எந்தக் கூலியும் கிடையாது.

التصنيفات

பெயர்களும் தீர்ப்புகளும்