பெயர்களும் தீர்ப்புகளும்

பெயர்களும் தீர்ப்புகளும்

18- 'உங்களில் எவர் ஒரு தீங்கைக் காண்கிறாரோ அவர் அதைத் தனது கரத்தால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையென்றால் அதை அவர் தனது நாவால் தடுக்கட்டும். அதையும் அவரால் செய்ய முடியவில்லையென்றால் அதை அவர் தனது மனதால் வெறுக்கட்டும். இதுதான் நம்பிக்கையின் (ஈமானின்) மிகவும் பலவீனமான- தாழ்ந்த- நிலையாகும்

19- 'இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்; அவர்கள் கூறினார்கள்'

21- 'சுத்தம் ஈமானின் பாதியாகும். 'الحمد لله' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூறுவது மீஸானின் நன்மையின் தட்டை நிரப்புகின்றது. 'سبحان الله' (அல்லாஹ் மிகத்தூய்மையானவன்) 'الحمد لله' ஆகிய இரண்டுமோ அல்லது ஒன்றோ, வானத்திற்கும் பூமிக்கும் இடையே இருப்பதை நிரப்பி விடுகின்றது

26- நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அன்ஸாரிகள் குறித்து இவ்வாறு கூறினார்கள் "அவர்களை உண்மை இறைவிசுவாசியைத் தவிர வேறு யாரும் நேசம் கொள்ளவும் மாட்டார். நயவஞ்சகனைத் தவிர வேறு யாரும் அவர்களை வெறுக்கவும் மாட்டார்.யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்

29- அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், 'அதுதான் ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை' என்று கூறினார்கள்

30- உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, 'இன்னின்னவற்றைப் படைத்தவன் யார்?' என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் அவரிடம், 'உன் இறைவனைப் படைத்தவன் யார்?' என்று கேட்பான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் எட்டும்போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) அவர் விலகிக் கொள்ளட்டும்