எமக்கெதிராக ஆயுதமேந்தியவர் எம்மைச் சார்ந்தவரல்லர்

எமக்கெதிராக ஆயுதமேந்தியவர் எம்மைச் சார்ந்தவரல்லர்

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் : "யார் எமக்கெதிராக ஆயுதமேந்துகிறாரோ அவர் எம்மைச் சார்ந்தவரல்லர்".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

இறைநம்பிக்கையாளர்கள் தமக்கிடையே பரஸ்பரம் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதில் சகோதரர்கள், அவர்களுடைய வார்த்தைகள் என்றுமே ஒன்றாகத்தான் இருக்கும், தமது எதிரிகள் முன்னிலையில் ஒரே கையாக நிற்பார்கள் என நபியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே அவர்கள் ஒற்றுமையாக இருந்து, தமது தலைவருக்குக் கட்டுப்பட்டு, அவருக்கெதிரான கிளர்ச்சியாளர்கள் விடயத்தில் அவருக்கு உதவி செய்வது அவசியமாகும். ஏனெனில் இந்த கிளர்ச்சியாளர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைத்து விட்டனர், ஆயுதமேந்தினர், அச்சுறுத்தினர், எனவே அல்லாஹ்வின் கட்டளையின் பால் மீளும் வரை அவர்களுக்கெதிராகப் போரிடுவது அவசியமாகும், ஏனெனில் முஸ்லிம்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து அத்துமீறும் இவர்களது உள்ளங்களில் இஸ்லாமிய நேசம் இல்லை, இச்செயல் பெரும் பாவங்களில் ஒன்று என்பதைப் பறைசாற்றும் கடுமையான எச்சரிக்கை இந்நபிமொழியில் உள்ளது, எனவே அவர்களுடன் போரிட்டு, நெறிப்படுத்துவது அவசியமாகும்.

فوائد الحديث

ஆட்சியாளர்களிடமிருந்து இணைவைப்பிற்கு இட்டுச் செல்லாத சில பாவங்கள் நிகழ்ந்தாலும் அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வது ஹராமாகும், ஏனெனில் அவர்களுக்கெதிராக கிளர்ச்சி செய்வதால் ஏற்படக்கூடிய உயிர்ப்பலி, நிரபராதிகள் கொலை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், ஒழுங்கு சீர்குழைவு போன்ற பாதிப்புக்கள் அவர்கள் ஆட்சியில் நிலைத்திருப்பதை விட பாரிய விபரீதமாகும்.

ஒரு சில பாவங்களில் ஈடுபடக்கூடிய ஆட்சிளார்களுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்வது ஹராம் எனும் போது மார்க்கப்பற்றுள்ள நீதமான ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வது எம்மாத்திரம்?

வேடிக்கைக்காகக் கூட முஸ்லிம்களை ஆயுதங்கள் போன்றவற்றால் அச்சுறுத்துவது ஹராமாகும்.

التصنيفات

பாவம் செய்தல், வழிப்பறிக்கொள்ளையர்களுக்கான தண்டனை