'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'

'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள். ஒரு மனிதர், கஃபாவின் மீது சத்தியமாக, இல்லை என்று கூறுவதை கேட்டார்கள் உடனே இப்னு உமர் அவர்கள் கூறினார்கள் இறைவனைத் தவிர வேறு யார் மீதும் சத்தியம் செய்யப்படக்கூடாது, ஏனென்றால் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்வதை நான் கேட்டேன்: 'அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தவர் நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார்'.

[ஸஹீஹானது-சரியானது] [رواه أبو داود والترمذي وأحمد]

الشرح

இந்த ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் யார் அல்லாஹ் மற்றும் அவனது திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் அல்லாதவற்றில் சத்தியம் செய்கிறாரோ அவர் அல்லாஹ்வை நிராகரித்து விட்டார், அல்லது இணைவைத்து விட்டார் என்று கூறுகிறார்கள். ஏனெனில் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்வது அதனை மகத்துவப் படுத்துவதைக் குறிக்கின்றது, உண்மையான மகத்துவமானது அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியதாகும். ஆகவே அல்லாஹ்வின் மீதும் அவனது திருநாமங்கள் மற்றும் அவனது பண்புகள் மீதுமே சத்தியம் செய்தல் வேண்டும். இந்தவகை சத்தியம் சிறிய வகை ஷிர்க்காகும். என்றாலும் ஒரு பொருளின் மீது சத்தியம் செய்தவர் அவர் சத்தியம் செய்தவற்றை அல்லாஹ்வை மகத்துவப்படுத்துவது போல், அல்லது அதை விடவும் அதிகமாக போற்றி மகத்துவப் படுத்தினால் அவரின் சத்தியம் பெரிய வகை இணைவைப்பாக மாறிவிடும்.

فوائد الحديث

உண்மையில் சத்தியம் செய்வதன் மூலம் மகிமைப்படுத்துவது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உரிய கடமையாகும். எனவே அல்லாஹ்வின் மீதும் அவனின் பெயர்கள் மற்றும் பண்புகள் மீது மாத்திரமே சத்தியம் செய்தல் வேண்டும்.

நன்மையை ஏவி தீமையை தடுத்தல் பணியை மேற்கொள்வதில் ஸஹாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை இந்த ஹதீஸ் சுட்டிக்காட்டுவதோடு குறிப்பாக குறிப்பிட்ட தீமையானது இணைவைத்தல் அல்லது இறைநிராகரிப்பு போன்ற விடயங்களில் இருந்தால் அதிக கவனம் செலுத்தியமையை காண முடிகிறது.

التصنيفات

இணைவைப்பு