இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு…

இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைர (ரலி), அதாஃ பின் யஸார் (ரலி) ஆகியோர் கூறினார்கள் : "இறைவா எனது சமாதியை வணங்கப்படும் சிலையாக ஆக்கி விடாதே, தமது நபிமார்களின் சமாதிகளை பள்ளிகளாக ஆக்கிக் கொண்ட ஒரு கூட்டத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையாகி விட்டது".

[ஸஹீஹானது-சரியானது] [இதனைஅஹ்மத் பதிவு செய்திருக்கிறார்]

الشرح

யூத, கிறிஸ்தவர்கள் தமது நபிமார்களின் சமாதிகள் விடயத்தில் அவை சிலைகளாக மாறுமளவிற்கு அளவு கடந்து சென்ற நிலை தனது சமாதி விடயத்தில் தனது சமூகத்திற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என நபியவர்கள் அஞ்சினார்கள். தனது சமாதியை அவ்வாறு ஆக்கிவிடக் கூடாதென இறவனிடம் வேண்டினார்கள். பின் யூத, கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ்வின் கோபம் ஏற்படக் காரணமாக இருந்ததை விழிப்பூட்டினார்கள். நபிமார்களின் சமாதிகளை வணங்கப்படும் சிலைகளாக மாற்றியதால், ஓரிறைக் கொள்கைக்கு முரணான இணைவைப்பில் வீழ்ந்ததே அதற்குக் காரணமாகும்.

فوائد الحديث

நபிமார்களின் சமாதிகள் விடயத்தில் அளவு கடந்து செல்வது வணங்கப்படும் சிலைகளாக அவற்றை ஆக்கிவிடும்.

சமாதிகளை மஸ்ஜிதுகளாக எடுப்பதும் அவற்றில் அளவு கடந்து செல்வதில் அடங்கும், மேலும் அது இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும்.

அல்லாஹ் தனது தகுதிக்கும் வல்லமைக்கும் ஏற்றவாரு கோபப்படுவான் என்பதால் அவனுக்கு கோபம் எனும் பண்பு உள்ளதை உறுதிப்படுத்தல் வேண்டும்.

மகிமைப் படுத்துவதற்காக சமாதிகளை நாடிச் செல்வது அவற்றை வணங்குவதாகும். அதிலிருப்பவர் எந்தளவு அல்லாஹ்வுக்கு நெருக்கமானவராக இருந்தாலும் அச்செயல் இணைவைப்பாகும்.

சமாதிகள் மீது பள்ளிகள் கட்டுவது ஹராமாகும்.

பள்ளியாகக் கட்டப்படாவிட்டாலும் சமாதிகளிலே தொழுவது ஹராமாகும்.

التصنيفات

இணைவைப்பு, இணைவைப்பு, பள்ளிவாயிலின் சட்டங்கள், பள்ளிவாயிலின் சட்டங்கள்