நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை…

நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : "நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு".

[ஸஹீஹானது-சரியானது] [இருவரும் (இமாம் புஹாரியும் முஸ்லிமும்) ஒன்று பட்டது]

الشرح

நயவஞ்சகர்கள் மக்கள் காண்பதற்காகவே செயற்படுவார்கள், அல்லாஹ்வை குறைவாகவே நினைவுகூர்வார்கள் என அல்லாஹ் கூறுகின்றான். இஷா, பஜ்ர் தொழுகைகளில் அவர்களது சோமபல் மென்மேலும் வெளிப்படுகின்றது, ஏனெனில் அவ்விரண்டும் இருளில் தொழப்படுபவை, தொழக்கூடியவர்கள் இவர்களைக் காணமுடியாது. ஓய்வு நேரம், இன்பமான உறக்கத்திற்கு மத்தியில் நடைபெறும் இவ்விரு தொழுகைகளிலும் பெரும்பான்மையான நயவஞ்சகர்கள் அலட்சியமாக நடப்பதைக் காணலாம். ஈமானிய உணர்வு, நன்மையை எதிர்பார்த்தல் போன்ற தூண்டுதல் காரணிகளால் உந்தப்பட்டவர்கள் மாத்திரமே அவ்விரு தொழுகைகளையும் கூட்டாக நிறைவேற்றுதல் உற்சாகமாக இருப்பார்கள். நிலமை இவ்வாறிருப்பதால் இவ்விரு தொழுகைகளும் நயவஞ்சகர்களுக்கு கடுமையானதாகவும், சுமையானதாகவும் உள்ளது. இவ்விரண்டையும் கூட்டாகப் பள்ளியில் நிறைவேற்றுவதற்குரிய கூலியை அவர்கள் அறிந்தால் குழந்தைகள் கை, கால்களால் தத்தித் தவழ்வதைப் போன்று தவழ்ந்தாயினும் வந்து சேர்வார்கள். இதில் சோம்பேறிகளாகப் பின்வாங்குவோரைத் தண்டிக்க எண்ணியாதாக நபியவர்கள் சத்தியமிட்டுக் கூறுகின்றார்கள். இது எவ்வாறெனில் தொழுகைக்கு ஏவி, பின் ஒருவரை நியமித்து, அது கூட்டாக அது நிறைவேற்றப்பட்ட பின் சிலருடன் சேர்ந்து விறகுகளை சுமந்து சென்று தொழுகைக்கு சமூகந்தராதோரை, அவர்கள் செய்த குற்றத்தின் கடுமை காரணமாக அவர்களது வீட்டுடன் வைத்து கொழுத்த எண்ணினார்கள். பெண்கள், அப்வாவிகள், பாவமறியாச் சிறுவர்கள் வீட்டில் இருப்பதே நபியவர்கள் கொழுத்தாததற்குக் காரணம் என வேறு சில அறிவிப்புக்களில் வந்துள்ளது.

فوائد الحديث

பருவமடைந்த அனைத்து ஆண்கள் மீதும் கூட்டுத் தொழுகை (தனிப்பட்ட) கடமையாகும்.

நலவுகள் செய்வதை விட தீங்குகளைத் தடுப்பதற்கே முன்னுரிமை வழங்கப்படும், தண்டனைக்குத் தகுதியற்றவர்களும் சேர்த்துத் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சமே நபியவர்கள் கூட்டுத்தொழுகைக்கு வராதோரைக் கொழுத்தாமல் இருக்கக் காரணமாகும்.

தண்டிக்காமல் இலகுவான எச்சரிக்கை மூலமே ஒரு தவறு நீங்கி விடும் என்றால் தண்டனைக்குச் செல்லாமல் அந்த இலகு வழியுடனேயே போதுமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் நபியவர்களும் தண்டனையை விட எச்சரிக்கையையே இங்கு முன்னுரிமைப் படுத்தியுள்ளார்கள்.

அனைத்துத் தொழுகைகளுமே நயவஞ்சகர்களுக்கு சுமையானதுதான், இருப்பினும் இஷாவும், பஜ்ருமே மிகச் சுமையானதாகும்.

நயவஞ்சகர்கள் தமது வணக்கத்தின் மூலம் முகஸ்துதியையும், புகழையுமே நாடுவார்கள், ஏனெனில் மக்கள் காணும் நேரத்தில் தவிர அவர்கள் தொழுகைக்கு வர மாட்டார்கள்.

இஷா, பஜ்ர் தொழுகைகளின் சிறப்பு இங்கு கூறப்பட்டுள்ளது.

இஷா, பஜ்ர் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றுதனால் பாரிய கூலி கிடைப்பதுடன், தவழ்ந்தாவது சமூகந்தர மிக அருகதையானதே அவ்விரு தொழுகைகளும்.

இஷா, பஜ்ர் தொழுகைகளின் சிரமம் அவ்விரண்டையும் கூட்டாக நிறைவேற்றுவதிலேயே உள்ளது, நபிமொழியின் வசனநடை அதனையே உணர்த்துகின்றது. அதனை விட்டும் பின்வாங்குவதற்கான உந்து சக்தி, மற்றும் திசை திருப்புவதற்கான காரணி பலமாக இருப்பதனாலேயே இவ்விரு தொழுகைகளும் சுமையாக உள்ளது.

தொழுகை நடத்தும் இமாமிற்கு அவசிய வேலைப்பளுக்கள் இருப்பின், தனக்குப் பிரதிநிதியாக வேறொருவரை நியமிக்கலாம்.

குற்றவாளிகள் அவர்களது கவனமின்மைக்காகக் குற்றம் பிடிக்கப்படுவர்.

التصنيفات

நயவஞ்சகம், நயவஞ்சகம், தொழுகையின் சிறப்பு, தொழுகையின் சிறப்பு