'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும்…

'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள். 'மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாயோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று அவரிடம் கூறப்படும்'

[ஹஸனானது-சிறந்தது] [رواه أبو داود والترمذي والنسائي في الكبرى وأحمد]

الشرح

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்து அதில் உள்ளவற்றை அமல்செய்து எப்போதும் ஓதுவதிலும் மனனம் செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மனிதர் சுவர்கத்தினுள் நுழைந்துவிட்டால்; அவரிடம் அல்குர்ஆனை ஓதுவீராக அதன் மூலம் சுவர்க்கத்தின் படித்தரங்களில் ஏறிச்செல்வீராக மேலும் உலகத்தில் அமைதியாகவும் நிதானமாகவும் ஒதியது போன்று இங்கும் ஓதுவீராக உனது அந்தஸ்த்து நீ கடைசியாக ஓதி முடிக்கும் வசனத்தில் உள்ளது என்று அவரிடம் கூறுப்படும் என நபியவர்கள் அறிவிக்கிறார்கள்.

فوائد الحديث

செயல்களின் முறை மற்றும் அளவுக்கேற்பவே கூலி உண்டு.

அல்குர்ஆனை முறையாக ஓதி அதனை மனனமிடுவதுடன் அதில் உள்ளவற்றை சிந்தித்து உணர்ந்து செயல்படுவதற்கு ஆர்வமூட்டப்பட்டிருத்தல்.

சுவர்க்கம் பல அந்தஸ்துக்களையும்(உயர் பதவிகளையும்),அதிகமான படித்தரங்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் குர்ஆனிய மனிதர்களே உயர் அந்தஸ்த்துக்களை அடைந்து கொள்வர்.

التصنيفات

குர்ஆனைப் பராமரிப்பதன் சிறப்பு, அல்குர்ஆனிக் சிறப்புகள்